சிரமத்தைப் பார்க்காமல் வருகிற சில தினங்களில் சூரிய உதயத்துக்கு முன்னரே எழுந்து கிழக்கு வானை நோக்கினால் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நான்கு கிரகங்களையும் ஒரே சமயத்தில் காண முடியும்.
|
படத்தின் மேற்புறத்தில் வியாழனும் வெள்ளியும் எடுப்பாகத் தெரிகின்றன சிறிய புள்ளியாக இருப்பது செவ்வாய். அடிவானில் தெரிவது புதன். |
ஆனால் அந்த நான்கும் மேலே கூறிய வரிசையில் இல்லாமல் மேலிருந்து கீழாக வியாழன், வெள்ளி, செவ்வாய், புதன் என்ற வரிசையில் தெரியும். அக்டோபர் 28 ஆம் தேதி காலை சுமார் ஐந்தரை மணிக்கு இவ்வாறு தெரியும்.
அக்டோபர் 26 ஆம் தேதியிலிருந்தே இந்த நான்கு கிரகங்களையும் காண முடியும்.
|
மேற்கு வானில் சனி கிரகம் தெரிவதைக் காணலாம். அருகே இடது புறம் இருப்பது கேட்டை (Antares) நட்சத்திரமாகும். |
பொதுவில் வானில் நம்மால் ஐந்து கிரகங்களை வெறும் கண்ணால் காண முடியும். மேலே கூறியபடி நான்கு கிரகங்கள் கிழக்கு வானில் தெரியும். சனி கிரகத்தை சூரியன் அஸ்தமித்த பின்னர் மேற்கு வானில் காணலாம்.
9 comments:
Thanks for the information sir.
கேட்டையும் னவகிரகத்தில் ஒன்றா?
வணக்கம்.
மிகவும் பயனுள்ள தகவல்
பதிவுக்கு மிக்க நன்றி .
<> கோ.மீ. அபுபக்கர்
கல்லிடைக்குறிச்சி 627416
நாள் 26102015
srinivasansubramanian
நட்சத்திரம் என்பது பிரும்மாண்டமானது. சுய ஒளி கொண்டது.சுருங்கச் சொன்னால் நெருப்பு உருண்டை. கிரகங்கள் அப்படியானவை அல்ல. பூமி, செவ்வாய் போன்றவை கிரகங்கள். இவை சூரியன் என்னும் நட்சத்திரத்தை சுற்றி வருபவை.
அஸ்ட்ரானமி எனப்படும் வானவியலின்படி புதன், வெள்ளி,,பூமி, செவ்வாய், வியாழன்,சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவை கிரகங்கள்
ஜோசிய சாஸ்திரப்படியான கிரகங்களில் சூரியன், சந்திரன், ராகு கேது ஆகியவையும் கிரகங்கள். ஜோசிய சாஸ்திரத்தில் யுரேனஸ் நெப்டியூன், புளூட்டோ,பூமி ஆகியவை சேர்க்கப்படவில்லை.
கேட்டை என்பது மிக பிரும்மாண்டமான நட்சத்திரம் அது சூரியனை விட 15 மடங்கு பெரியது. கேட்டை நட்சத்திர்ம் சுமார் 520 ஒளியாண்டு தொலைவில் உள்ளது
அருமையான பதிவு. வாழ்த்துகள்
வணக்கம் .
எங்கள் ஊர் பகுதியில் ( திருநெல்வேலி மாவட்டம் ) கடந்த இரு நாட்களாக மேகம் / வானிலை , மழை மேகம் போல தெளிவில்லாமல் இருக்கிறது., எனவே கிரகங்கள் எதையும் பார்த்து ரசிக்க முடியவில்லை. நளை ( 28 10 2015 ) காலை யிலாவது காண முடியுமா என காத்திருக்கிறேன்.
<> கோ.மீ. அபுபக்கர்
கல்லிடைக்குறிச்சி 627416
வணக்கம் ஐயா, எனக்கு ஒரு சந்தேகம் சூரியன் ஒரு நட்சத்திரம்னு சொல்றிங்க. அப்ப சூரியன பூமி போன்று கிரகங்கள் சுற்றி கொண்டு இருக்கிறது. அதே போல நாம் இரவில் காணும் நட்சத்திரங்களை கிரகங்கள் சுற்றுமா? சுற்றும் என்றால் எவ்வளவு?
Pavattakudi Ganesh
உங்களது ஊக்ம் மிகச் சரியானதே.வானில் உள்ள நட்சத்திரங்களில் பெரும்பாலானவற்றுக்கு கிரகங்கள் உண்டு. அந்த கிரகங்களைக் கண்டுபிடிப்பதில் ஒரு டெலஸ்கோப் ஈடுபட்டுள்ளது. அதற்கு கெப்ளர் பறக்கும் டெலஸ்கோப் என்று பெயர்.பூமி மாதிரி கிரகங்கள் உள்ளனவா என்று கண்டுபிடிப்பது அதன் பிரதான நோக்கம்
நன்றி ஐயா.... கெப்ளர் பற்றி எனக்கு தெரியும். அதுவும் தாங்கள் மூலம் தான் என்பதால் பெருமைபடுகிறேன்.
Post a Comment