Pages

Oct 25, 2015

கிழக்கு வானில் நான்கு கிரகங்கள்

சிரமத்தைப் பார்க்காமல் வருகிற சில தினங்களில் சூரிய உதயத்துக்கு முன்னரே எழுந்து கிழக்கு வானை நோக்கினால் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நான்கு கிரகங்களையும் ஒரே சமயத்தில் காண முடியும்.
படத்தின் மேற்புறத்தில் வியாழனும் வெள்ளியும் எடுப்பாகத் தெரிகின்றன
சிறிய புள்ளியாக இருப்பது செவ்வாய். அடிவானில் தெரிவது புதன்.
ஆனால் அந்த நான்கும் மேலே கூறிய வரிசையில் இல்லாமல் மேலிருந்து கீழாக வியாழன், வெள்ளி, செவ்வாய், புதன்  என்ற வரிசையில் தெரியும். அக்டோபர் 28 ஆம் தேதி காலை சுமார் ஐந்தரை மணிக்கு இவ்வாறு தெரியும்.

அக்டோபர் 26 ஆம் தேதியிலிருந்தே இந்த நான்கு கிரகங்களையும் காண முடியும்.
மேற்கு வானில் சனி கிரகம் தெரிவதைக் காணலாம்.
அருகே  இடது புறம் இருப்பது கேட்டை (Antares) நட்சத்திரமாகும்.
பொதுவில் வானில் நம்மால் ஐந்து கிரகங்களை வெறும் கண்ணால் காண முடியும். மேலே கூறியபடி நான்கு கிரகங்கள் கிழக்கு வானில் தெரியும். சனி கிரகத்தை சூரியன் அஸ்தமித்த பின்னர் மேற்கு வானில் காணலாம்.