நமது பூமியானது சூரியனை ( சூரியன் ஒரு நட்சத்திரமே) சுற்றி வருகிறது. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பூமி போன்ற கிரகமும் ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. இப்படி ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது என்று கேட்கலாம்.
சூரிய மண்டலத்துக்கு அப்பால் விண்வெளியில் ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளன. அப்படியான நட்சத்திரங்களும் சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் போலவே கிரகங்களைப் பெற்றிருக்கலாம் என நீண்டகாலமாக ஒரு கருத்து இருந்து வருகிறது. ஆனால் அந்தக் கிரகங்களைக் கண்டுபிடிப்பதில் நீண்ட காலமாகப் பல பிரச்சினைகள் இருந்து வந்தன.
ஆனால் நாஸாவின் கெப்ளர் டெலஸ்கோப் புதிய முறையைப் பின்பற்றி அந்த கிரகங்களைத் தேட முற்பட்டது. இவ்விதம் விண்வெளியை ஆராய்ந்ததில் கடந்த சில ஆண்டுகளில் சுமார் 1000 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இவை அனைத்துமே பனிக் கட்டியால் மூடப்பட்ட உருண்டைகள்.
இதல்லாமல் இப்படி கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்கள் ( பனி உருண்டைகள்) எல்லாமே நமது வியாழன் கிரகம் அளவுக்கு அல்லது அதை விட வடிவில் பெரியவையாக உள்ளன.( வியாழன் கிரகம் பூமியைப் போல 1400 மடங்கு பெரியது).
கெப்ளர் டெலஸ்கோப் கண்டுபிடித்துள்ள கிரகம் இப்படியாக இருக்கலாம் என ஓவியர் கற்பனையாக வரைந்த படம். |
எனவே பூமி மாதிரி என்றால் ஒரு கிரகம் தனது நட்சத்திரத்திலிருந்து உகந்த தூரத்தில் இருக்க வேண்டும். காற்று மண்டலம் இருக்க வேண்டும். தண்ணீர் இருக்க வேண்டும். கிட்டத்தட்ட பூமி சைஸில் இருக்க வேண்டும். இவ்வளவு நாள் தேடியதற்குப் பிறகு இப்போது தான் பூமி மாதிரியில் ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள கிரகம் பூமியை விட சற்றே பெரியது. அதாவது 60 சத விகிதம் பெரியது. அது சுற்றி வருகின்ற நட்சத்திரம் நமது சூரியனை விட சற்றே பெரியது. எனவே மேற்படி கிரகத்துக்குப் போதுமான வெப்பம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சூரியனை பூமியானது ஒரு தடவை சுற்றி முடிக்க 365 நாட்கள் ஆகின்றன. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இன்னொரு பூமியானது தனது நட்சத்திரத்தை ஒரு தடவை சுற்றி முடிக்க 385 நாட்கள் ஆகின்றன. பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள். இன்னொரு பூமியின் வயது 600 கோடி ஆண்டுகள். எனவே உயிரினம் தோன்றியிருப்பதற்கான வாய்ப்பு உண்டு..
இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகத்துக்கு கெப்ளர் 452b என்று பெயரிட்டுள்ளனர். அது தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது.
கெப்ளர் விண்வெளி டெலஸ்கோப் (Kepler Space Telescope) 2009 ஆம் ஆண்டில் உயரே செலுத்தப்பட்டது. அது சூரியனை சுற்றி வந்தபடி விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களை ஆராய்ந்து அவற்றுக்கு உள்ள கிரகங்களைக் கண்டுபிடித்து வருகிறது.
இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள் "இன்னொரு பூமியை" நேரில் போய் ஆராய்ந்தால் என்ன என்று கேட்கலாம். அது சாத்தியமற்றது. ஏனெனில் அது பூமியிலிருந்து 1400 ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது.
பூமியிலிருந்து சிக்னல் வடிவில் :ஹலோ: என்று சொன்னால் சிக்னல்கள் போய்ச் சேர 1400 ஆண்டுகள் ஆகும். 452b கிரகத்தில் உள்ளவர்கள் (யாரேனும் இருந்தால்) பதிலுக்கு ஹலோ சொன்னால் சிக்னல்கள் நமக்கு வந்து சேர மேலும் 1400 ஆண்டுகள் ஆகும். இங்கு பூமியில் அந்த சிக்னல்களைப் பெறுகிறவர்கள் என்ன என்று புரியாமல் மண்டையைப் பிய்த்துக் கொள்வார்கள்.
நாம் இன்று அடைந்துள்ள வளர்ச்சியை அவர்கள் சுமார் 150 கோடி ஆண்டுகளுக்கு முன்னாள் அடைந்திருக்கலாம் (உயிரினம் இருந்தால்). இங்கு டைனசார்கள் திரிந்து கொண்டிருந்த காலம் தொட்டு அவர்கள் நம் பூமியை டெலஸ்கோப் மூலம் ஆராய்ந்து வருகிறார்களோ என்னவோ.
ReplyDeleteசரவணன்
how NASA calculated this Earth2.0;/kepler 452b is 1400 light years away from our earth?this question prevails with our youngsters.. I told its with calculations only is it right? please clarify this and clear our doubts
ReplyDeleteThanigai sir,
ReplyDeleteWat u have said is correct. Its physics calculations. 12th standard bookla irukum.
Ramadurai sir,
ReplyDeleteSorry to ask repeated questions. Indha NASA yedhukaaga yepa paathaalum dhoorathula, manidhan travel panni reach pannavae mudiyaadha planets ai research pananum?
Adhuku bhadhila namba earthku pakathula, humans reach aavara dhooradhulla new planets thedana yena avungaluku?
Oru vela research panni mudichirupaangalo? Suthama bhoomiku pakathula vera planets manidhan vaalara planet kedayave kedayaadhunu mudivu panitaangala?
Naamba nambaloda ideas, suggestions, questions nasa Ku yepdi solradhu? Avunga namba questionku answer panuvaangala?
சரவணன்
ReplyDeleteதாங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம். அதற்கு நேர்மாறாக அங்கு இப்போது தான் டைனோசர்க்ள் காலமாக இருக்கலாம்.
Siva
ReplyDeleteசூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் பூமி தவிர வேறு எதிலும் உயிரினம் கிடையாது. சூரியனுக்கு அருகாமையில் என்று சொல்லத்தக்க நட்சத்திரங்களில் பூமி மாதிரி கிரகம் இல்லை.சூரியனுக்கு அருகாமையில் என்று சொல்லத்தக்க நட்சத்திரத்திரம் ஒன்றில் ஒரு வேளை பூமி மாதிரி கிரகம் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் நம்மால் போக முடியாது. நமது பக்கத்து வீடு என்று சொல்லத்தக்க செவ்வாய் கிரகத்துக்குப் போவதே இன்னமும் சாத்தியப்படவில்லை.. விண்வெளி சமாச்சாரமே வெகு தொலைவு தான்.
thanigai
ReplyDeleteஒரு நட்சத்திரம் 400 ஒளியாண்டு தொலைவுக்குள்ளாக இருந்தால் டிரையாங்குலேஷன் என்ற முறையில் தூரத்தைக் கண்டுபிடிக்க இயலும். அதற்கும் அதிகமான தொலைவில் இருந்தால் மேலும் சிக்கலான முறையைப் பின்பற்றுகிறார்கள்.
செவ்வாய் கிரகமும் சரியான தூரத்தில்தான் இருக்கிறது.அங்கே உயிரினம் இல்லையே.
ReplyDeleteசதிஷ்
சதிஷ்
ReplyDeleteமிகவும் சரியான கேள்வி. துரதிருஷ்டவசமாக செவ்வாய் கிரகம் வடிவில் சிறியது. அதனால் அக்கிரகத்தினால் தனது காற்று மண்டலத்தை கெட்டியாக ஈர்த்து பிடித்து வைத்திருக்க முடியவில்லை. இன்னமும் செவ்வாய் மெல்ல தனது காற்று மண்டலத்தை இழந்து வருகிறது. இதன் விளைவாக செவ்வாயில் காற்றழுத்தம் குறைவு. தகுந்த காற்றழுத்தம் இருந்தால் தான் தண்ணீரானது திரவ வடிவில் இருக்க முடியும். ஆகவே செவ்வாயில் சில இடங்களில் உள்ள பனிக்கட்டிகள் பதங்கமாதல் என்ற முறையில் நீராக மாறாமலேயே ஆவியாகி மேலே போய் விடுகின்றன.
செவ்வாயுடன் ஒப்பிட்டால் பூமியானது சைஸில் பெரியது. எனவே தகுந்த காற்றழுத்தம் இருக்கிறது. அதன் பலனாக பூமியில் தண்ணீர் இருக்கிறது. உயிர் வாழ்க்கைக்குத் தண்ணீர் மிக முக்கியம்.
Ramadurai sir,
ReplyDeleteNeenga solradha paatha naamba thapikanumna interstellar padathula sona maari warm holes adhu kandupudichi vera solar systemku thapicha daan mudium pola .......
Siva
ReplyDeleteworm hole எல்லாம் வெறும் கொள்கை அளவிலான சமாச்சாரம். வொர்ம் ஹோல் இருக்கிற இடத்துக்குப் போவதற்கே சில ஒளி ஆண்டு தூரம் பயணம் செய்தாக வேண்டும். அதெல்லாம் கற்பனையில் -- சினிமாவில் தான் சாத்தியம். செவ்வாய்க்குப் போவதே திண்டாட்டமாக இருக்கிறது. மனிதனுக்கு பூமியை விட்டால் வேறு கதி இல்லை.
ஐயா வணக்கம், கட்டுரைக்கு மிக்க நன்றி....
ReplyDeleteஎன்னுடைய சில புரிதல்களை இங்கே பகிர விரும்புகின்றேன்... தங்கள் கருத்தை தெரிவிக்கவும்...
1. நாம் காணும் அந்த பூமியானது 1400 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதென்றால், நான் தற்பொழுது தொலைநோக்கி மூலம் காண்பது 1400 ஆண்டுகள் பழமையான கிரகம்
2. ஒரு வேளை இந்தக் கணமே அந்த கிரகம் வெடித்து சிதறினாலும் அது நமக்கு காட்சிகளாக கிடைக்க தெரியவர 1400 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும்
3. அதே போல அந்த புதிய பூமியில் இந்நேரம் நாம் இருந்தால், நம்மால் நம்முடைய பூமியின் 1400 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை காண முடியும் தானே...
4. காலப்பயணத்தின் மூலம் நாம் இறந்த காலத்தை காண முடியுமே தவிர திறப்படங்களில் காண்பிப்பத்தைப் போல நம்மால் அங்கு செலவு அங்குள்ள சம்பவங்களை மாற்றவோ முடியாது தானே ?
DR
ReplyDeleteதாங்கள் கூறிய முதல் மூன்றும் சரி. ஆனால் நான்காவதான காலப் பயணம் என்பது நடைமுறையில் சாத்தியமற்றது.
Sir,
ReplyDeleteTelescope is used to see distant objects from here.Moon is at 384,400 km .If it is focussed at an object we will be seeing the movement as and when it is happening.So we will be seeing live,there wont be time difference.
I could not understand the fact behind Dr.Point no.1,2,3
Please explain
Thanks
RAM
ReplyDeleteபாயிண்ட்1. ஒளியானது மணிக்கு சுமா 3 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதாகும். சந்திரன் சுமார் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.ஆகவே சந்திரனிலிருந்து கிளம்பிய ஒளியான்து பூமிக்கு 1.3 வினாடியில் வந்து சேர்ந்து விடும். கெப்ளர்452பி கிரகம் மிக மிகத் தொலைவில் உள்ளதால் அதிலிருந்து கிளம்பக்கூடிய ஒளியானது பூமிக்கு வந்து சேர 1400 ஆண்டுகள் ஆகும்.அதாவது1400 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு அது இருந்தது. இன்றைக்கு இருக்கிறதா என்பது தெரியாது. மேற்படி கிரகத்திலிருந்து சிக்னல்கள் அனுப்பப்பட்டால் அது அவை வந்து சேரவும் 1400ஆண்டுகள் ஆகும். நாம் பதிலுக்கு சிக்னல்கள் அனுப்பினால் அவை போய்ச் சேரவும் 1400 ஆண்டுகள் ஆகும்.
பாயிண்ட் 2. மேற்படி கிரகம் ஒரு வேளை வெடித்தால் ஒளி வந்து சேர 1400 ஆண்டுகள் ஆகும் என்பதால் அவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகுதான் தெரிய வரும்.
பாயிண்ட்3.மேற்படி கிரகத்தில் உள்ள் ஒருவர் டெலஸ்கோப்ம் மூலம் பூமியைப் பார்க்க நேர்ந்தால் 1400 ஆண்டுகளுக்கு முன் இருந்த பூமியைத் தான் அவர் காண்பார்.
is it clear
ReplyDeleteஅருமையான விளக்கம்!
தாங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஸம்
Sir,
ReplyDeleteThanks a lot for explanation.It is clear now.
RAM-- ஒரு திருத்தம்
ReplyDeleteஎனது பதிலில் கைப்பிசகாக ஒரு தவறு நேர்ந்துள்ளது. அதாவது" ஒளியானது வினாடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில்" என்று இருக்கவேண்டும். மாறாக " மணிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர்" என்று தவறுதலாக எழுதி விட்டேன். தவறுக்கு வருந்துகிறேன்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteRavi
ReplyDeleteமிக்க நன்றி. கைப்பிசகாக கோடி என்ற சொல் இடம் பெற்றுவிட்டது. 1400 ஆண்டுகள் என்று தான் இருக்க வேண்டும். திருத்தம் செய்யப்பட்டு விட்டது.
Please sir write one article about my favourite ever green HERO Abdul kalam. Please
ReplyDeleteradha
ReplyDeleteஒரு கட்டுரை உண்டு
வணக்கம் ஐயா
ReplyDeleteமனதில் நினைத்துக்கொண்டிருந்ததை வாசகர் கேட்டுவிட்டார். மாமனிதர் திரு A. P. J. அப்துல் கலாம் அவர்களின் கட்டுரையை ஆவலுடன் எதிபார்த்து காத்திருக்கிறோம்
வெங்கடேஷ்
Sir, We r very thankful to you sir. Because, You are the only person who is clearly explaining science in our mother tongue. After the writer Sujatha you are doing a very valuable work. Thank you very much sir. Keep it up.
ReplyDeleteமதிப்பிற்குரிய அய்யா:
ReplyDeleteநம் ஆழ் மனதிற்கும் பிரபஞ்ஜத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா??
By arul
Anonymous
ReplyDeleteதாங்கள் குறிப்பிட்டுள்ளது எனக்குத் தொடர்பு இல்லாத விஷயம்