புளூட்டோவைச் சுற்றிலும் துகள் படலம் இருக்கலாம் என்று ஒரு சமயம் கருதப்பட்டது. நெல்மணி சைஸில் உள்ள துகள் தாக்கினாலும் விண்கலம் சேதமடைந்து விண்கலம் செயல்படாமல் போகலாம் என்ற அச்சம் இருந்தது. நல்ல வேளையாக அப்படி எதுவும் ஏற்படவில்லை.
புளூட்டோவை நியூ ஹொரைசன்ஸ் கடந்த போது விண்கலத்தின் வேகம் மணிக்கு சுமார் 50 ஆயிரம் கிலோ மீட்டராக இருந்தது. எட்டு நிமிஷங்களில் அது புளூட்டோவைக் கடந்து சென்றது.
அப்போது புளூட்டோவுக்கும் விண்கலத்துக்கும் இடையே இருந்த தூரம் சுமார் 12,500 கிலோ மீட்டர்.
நியூ ஹொரைசன்ஸ் எடுத்த படங்களை நாஸா விஞ்ஞானிகள் இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு வாக்கில் வெளியிட்டனர்.
நாஸா வெளியிட்ட புளூட்டோவின் குளோசப் படம்
புளூட்டோவில் பனிக்கட்டியால் ஆன உயர்ந்த மலைகள் இருப்பதை அப்படங்கள் காட்டின.புளூட்டோவைச் சுற்றும் சாரோன் என்ற சந்திரனில் நீண்ட பள்ளத்தாக்கு இருப்பதையும் அவை காட்டின.
எனினும் சந்திரனில் இருப்பது போன்ற வட்டவடிவப் பள்ளங்க்ள் புளூட்டோவில் காணப்படவில்லை.
புளூட்டோவின் சந்திரன்களில் ஒன்றான சாரோன் NASA |
Sir,
ReplyDeleteIf it takes only 4 1/2 hours to reach earth, why is it taking 16months to send the data?
Also, second question is, if the mission is to study pluto, why is it going to kuiper belt?
Thanks
Leslie
Leslie Samuel
ReplyDeleteநியூ ஹொரைசன்ஸ் விண்கலத்தில் உள்ள ஆராய்ச்சிக் கருவிகள் அனைத்தும் சேகரிக்கப்படும் தகவல்கள் விண்கலத்தில் பதிவு செய்து வைக்கப்படும். அந்த விண்கலத்திலிருந்து தகவல்களை அனுப்புவதற்கான வேகம் குறைவு தான். நமது கம்ப்யூட்டரில் படம் டௌன்லோட் ஆவதற்கு அதிக நேரம் ஆகிறது. அது போல அந்த விண்கலத்திலிருந்து படங்கள் கிடைக்க நிறையவே நேரம் ஆகும். இப்படியான காரணங்களால் 16 மாதம் ஆகும்.
நியூ ஹொரைச்ன்ஸ் புளூட்டோவுக்காக மட்டும் அனுப்பப்படவில்லை. கைப்பர் பெல்டை ஆராய்வதற்காகவும் செலுத்தப்பட்டது. ஆகவே அது கைப்பர் பெல்ட் பகுதிக்குச் செல்கிறது
விண்கலம் 1 KB/sec என்ற வேகத்தில் தான் data transfer செய்யும் என நாளிழதில் படித்தேன். இது சரியா? இவ்வளவு குறைவான வேகம்தான் சாத்தியம் என்பதற்கு காரணம் என்ன? நன்றி ஐயா.
ReplyDeleteSir,
ReplyDeleteEven if new horizon found any compatible planet for life beyond pluto, sure humans cannot travel 470 crore km to live there. Then why researches are undergone just to gather information spending crores of money?
Instead of that, they can search planets near by earth know?
Siva
ReplyDeleteதாங்கள் கூறுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நம்மால் செவ்வாய் கிரகத்துக்குச் சென்று வர முடியுமா என்பதே கேள்விகுறியாக இருக்கிறது. ஆனால் 500 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புளூட்டோவை நேரில் சென்று பார்ப்பது போல நியூ ஹொரைசன்ஸ் பல தகவல்களை அளிக்கும் என்று தோன்றுகிறது. புளூட்டோவுக்கு அப்பால் உள்ள கைப்பர் பெல்டிலிருந்து தான் பல வால் நட்சத்திரங்கள் வருகின்றன. அவை பற்றி அறிய நாஸாவின் அந்த விண்கலம் உதவும். இந்த விண்கலத்திட்டத்தின் நோக்கம் பூமி மாதிரி கிரகங்கள் உள்ளனவா என்று கண்டறிவதல்ல. சூரிய மண்டலத்துக்கு அப்பால் பல ஒளி ஆண்டு தொலைவில் உள்ள கிரகங்களுக்கு நம்மால் ஒரு போதும் விண்கலங்களை அனுப்ப இயலாது.
வணக்கம் ஐயா
ReplyDelete500 கோடி கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் இருக்கும் ஒரு விண்கலத்திற்கு பூமியிலிருந்து அனுப்பும் சிக்னல்கள் (சமிக்ஞைகள்) எப்படி தங்குதடையின்றி செல்கின்றன சிக்னல்கள் எப்போதும் நேர்கோட்டில் தானே பயணிக்கும் அப்படியிருக்க இத்தனை கோடி கிலோமீட்டர்களுக்கு இடையில் எத்தனையோ தடைகள் இருக்கும் அவையனைத்தையும் தாண்டி சிக்னல்கள் எப்படி குறிப்பிட்ட விண்கலத்தை அடைகிறது. மேலும் ஒரு ஐயம், காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை என்று ஒரு பாடல் வரி உள்ளது பூமியில் காற்றலை உள்ளது ஆதலால் சிக்னல்கள் (சமிக்ஞைகள்) பரிமாறப்படுகின்றன ஆனால் காற்றலை இல்லாத விண்வெளியில் சிக்னல்கள் (சமிக்ஞைகள்) எவ்வாறு பரிமாறப்படுகின்றன
வெங்கடேஷ்
வெங்கடேஷ்
ReplyDeleteதாங்கள் கூறியது சரி. அதாவது சிக்னல்கள் நேர்கோட்டில் தான் செல்கின்றன. ஆனால் விண்வெளி என்பது மிகப் பரந்தது. தடைகள் என எதுவும் இல்லை. விண்வெளியின் பிரும்மாண்டத்துடன் ஒப்பிடுகையில் வியாழன் உட்பட கிரகங்கள் சுண்டைக்காய்கள்.
சிக்னல்கள் செல்ல எந்த ஊடகமும் தேவையில்லை. ஒலி செல்வதற்குத் தான் காற்று மண்டலம் தேவை. சிக்னல்கள் வெற்றிடம் வழியே கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் செல்பவை. அவ்வளவு வேகத்தில் சென்றாலும் மிகவும் தொலைவு என்றால் நேரம் பிடிக்கும். புளூட்டோ வட்டாரத்திலிருந்து நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் அனுப்பிய சிக்னல்கள் பூமிக்கு வந்து சேர நாலரை மணி நேரம் பிடித்தது.
Venkatesan
ReplyDeleteநியூஹொரைசன்ஸ் விண்கலத்தில் உள்ள கருவிகள் இயங்குவதற்கென RTG எனப்படும் அணுசக்தி பாட்டரியானது மின்சாரத்தை அளிக்கிறது.அது விண்வெளியில் செலுத்தப்பட்ட போது இருந்த திறன் இப்போது கொஞ்சம் குறைந்துள்ளது.
இந்த நிலையில் விண்கலத்தில் மின்சார ரேஷன் உள்ளது. ஒவ்வொரு கருவிக்கும் என குறிப்பிட்ட அளவு மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்கலத்திலிருந்து பூமிக்குத் தகவல்களை அனுப்பும் கருவிக்கும் குறிப்பிட்ட அளவு மின்சரம் ஒதுக்கப்படுகிறது. அக்கருவி அதை வைத்து சமாளித்துக் கொண்டாக வேண்டும்.
விண்வெளியில் மிகத் தொலைவில் உள்ள விண்கலங்களுடன் தொடர்பு கொள்ள அமெரிக்க பிரும்மாண்டமான தொடர்பு வசதியைப் பெற்றுள்ளது. ஒரு நாளில் எட்டு மணி நேரம் மட்டுமே நியூ ஹொரைசனுடன் தொடர்பு கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த DSN ஏற்பாடு வேறு பல பணிகளுக்கும் (செவ்வாயில் உள்ள கியூரியாசிடியுடன் தொடர்பு கொள்ளுதல் போன்று) பயன்ப்டுத்தப்படுவதாகும். இப்படியான பல காரணங்களால் தான் தாமதம் ஏற்படுகிறது
வணக்கம்ஐயா
ReplyDeleteசிக்னல்கள் பற்றி சிறிது தெளிவாக அறிய விரும்புகிறேன் பொதுவாக சிக்னல்கள் என்றால் என்ன, சிக்னல்கள் என்பது எவ்வாறு செயல்படுகிறது நாம் தினசரி உபயோகிக்கும் டிவியில் கூட ரிமோட் மூலம் ஒரு நொடியில் சேனல்களை மாற்றமுடிகிறது நாம் அழுத்தும் ஒரு பொத்தானில் இருந்து எவ்விதம் சிக்னல்கள் செல்கின்றன ரிமோட்டின் இடையில் உள்ளங்கையை வைத்து முழுமையாக மறைத்துக்கொண்டால் கூட கடவுள் துகள்களைப் போல :-) சிக்னல்கள் உள்ளங்கையை துளைத்துக்கொண்டு செல்கின்றதே எப்படி, மேலும் ஒரு சிறுபிள்ளைத்தனமான கேள்வி ஐயா, சிக்னல்களை கண்களால் காண முடியாது அப்படியிருக்க அவை இவ்வித்தமாகத்தான் செயல்படுகிறது என்பதை உணர்ந்துகொள்ள ஏதேனும் வழிமுறை இருக்கிறதா
ஐயா இக்கேள்வி கேட்பதற்குரிய கேள்விதானா என்று தெரியவில்லை இருந்த்தாலும் ஐயத்தை போக்கிக்கொள்ள இக்கேள்வியை இங்கே கேட்டிருக்கிறேன் தவறிருந்தால் மன்னிக்கவும்
வெங்கடேஷ்
வெங்கடேஷ்
ReplyDeleteசிக்னல்கள் சமாச்சாரம் பத்து வரிகளில் விளக்கக்கூடியது அல்ல.
Hello,
ReplyDeletei am new member of your blog.
its interesting and very useful information. i like to read it much.
thanks a lot for sharing these kind of information.
ஹைபர் பெல்ட் என்றால் என்ன ?
Thanks
விண்வெளியில் சிக்னல்கள் பற்றிய தகவல்களை பதிவிட முடியுமா
ReplyDeleteநன்றி
Anonymous
ReplyDeleteஅது ஹைபர் பெல்ட் அல்ல. கைப்பர் (kuiper Belt) புளூட்டோவுக்கும் அப்பால் சூரிய மண்டலத்தைச் சுற்றி தேன் கூடு போல எண்ணற்ற பனிக்கட்டி உருண்டைகள் உள்ளன. இதை சூரிய மண்டலத்தின் காம்பவுண்ட் சுவர் என்றும் வருணிக்கலாம். இங்குள்ள பனிக்கட்டி உருண்டைகளில் ஒன்றிரண்டு அவ்வப்போது அங்கிருந்து கிளம்பி வந்து சூரியனை சுற்றிவிட்டு திரும்பச் செல்கின்றன. இவற்றை நாம் வால் நட்சத்திரங்கள் என்று குறிப்பிடுகிறோம்.
Anonymous
ReplyDeleteகேள்வி தெளிவாக இல்லை. விண்வெளியிலிருந்து விண்கலங்கள் அனுப்பும் சிக்னல்கள் பலவீனமானவை. அவற்றைப் பெறுவதற்கு நாஸா உலகில் மூன்று இடங்களில் அமெரிக்கா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா-- ராட்சத ஆன்டென்னாக்களை நிறுவியுள்ளன. இவை விண்கலங்கள் அனுப்பும் சிக்னல்களைப் பதிவு செய்யும் திறன் கொண்டவை.
எனது பெயர் சுந்தர்
ReplyDeleteஹைபர் பெல்ட் பற்றிய தகவல்களுக்கு நன்றி
பூமிக்குள்ளே ரேடியோ AM, FM, VHF, UHF அலைவரிசைகளில் தகவல் பரிமாரலாம். Fibre optic குழாய்கள் மூலம் டிஜிட்டல் முறையில் தகவல் அனுப்பலாம். வேற்று கிரகங்களிலிருந்து தகவல்கள் பல்ஸ் கோட் மாடுலேஷன் Pulse Code Modulation என்ற முறையில் தகவல் பரிமாருவதாக மூன்றாம் ஆண்டு, ஐந்தாம் செமஸ்டர், கம்யூனிக்கேஷன்ஸ் புத்தகத்தில் படித்த ஞாபகம். மூன்றாம் ஆண்டு Electrical(EEE), Electronics (E&C), Computer Science மாணவர்களையோ ஆசிரியரையோ கேட்டால் அவர்கள் சொல்லி புரிந்துகொள்ளலாம்.
ReplyDelete