அச்சமயத்தில் இக்குழுவில் சேராத பியாஸி என்ற இத்தாலிய விஞ்ஞானி ஒரு ’குட்டிக் கிரக’ த்தைக் கண்டுபிடித்தார். அது தான் சீரீஸ்(Ceres)எனப்படும் அஸ்டிராய்ட் ஆகும். “காணாமல் போன” கிரகம் அதுவாக இருக்கலாம் என்று முதலில் நினைத்தனர். பின்னர் தான் எண்ணற்ற அஸ்டிராய்டுகளில் அதுவும் ஒன்று என்பது தெரிய வந்தது.
ஒரு கிரகம் இருந்திருக்குமானால் அதற்கென ஒரு சுற்றுப்பாதை இருந்திருக்கும். விஞ்ஞானிகள் மேலும் ஆராய்ந்த போது மேற்படி சுற்றுப்பாதையில் ஒன்றல்ல, பல லட்சம் துண்டுப் பாறைகள் பறந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் அஸ்டிராய்டுகள் என்று அழைக்கப்படுகின்றன.
புள்ளி புள்ளியாக உள்ளவை அஸ்டிராய்டுகள். இவை செவ்வாயின் (Mars) மற்றும் வியாழனின் (Jupiter) சுற்றுப்பாதைகளுக்கு இடையே அமைந்துள்ளன. |
அஸ்டிராய்டுகளில் உள்ள பெரிய துண்டு தான் சீரீஸ். அதன் குறுக்களவு வெறும் 950 கிலோ மீட்டர். அது சந்திரனையும் விடச் சிறியது.
வலது புறம் பூமி. இடது மேல் சந்திரன். இடது கீழ் சீரீஸ் |
முதலில் 5000 கிலோ மீட்டர் உய்ரத்தில் இருந்தபடி சுற்றும். பிறகு கீழாக 1300 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்தபடி சுற்றும். பிறகு மேலும் நெருங்கி 700 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பறந்து கொண்டிருக்கும்.
சீரீஸ் படம். டான் விண்கலம் 12 லட்சம் கிலோ மீட்டரிலிருந்து எடுத்தது |
டான் விண்கலம் கடந்த 2007 ஆம் ஆண்டு விண்வெளியில் செலுத்தப்பட்டது. அது முதலில் வெஸ்டா (Vesta) எனப்படும் வேறு ஒரு அஸ்டிராய்டை நெருங்கிச் சென்று ஆராய்ந்தது. அதை முடித்துக் கொண்டு டான் இப்போது சீரீஸை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
சீரீஸில் பனிக்கட்டி வடிவில் தண்ணீர் இருப்பதாகக் கருதப்படுகிறது. அதற்கு அடியில் ஒருவேளை தண்ணீர் இருக்கலாம் என்ற ஒரு கருத்து உள்ளது.
நாஸாவின் டான் விண்கலம் |
11 comments:
மிக நன்றாக உள்ளது.
அன்புள்ளா ராமதுரை ஜயா,
நான் உங்கள் வலைபதிவை கடந்த 2 வருடமாக படித்து வருகிறன், தமிழில் விண்வெளி மற்றும் அறுவியல் சார்ந்த கட்டுரைகளை உங்கள் வலைபதிவில் படிப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. நான் உங்கள் விண்வெளி புத்தகத்தை படித்து உள்ளன், இப்படி ஒரு புத்தகத்தை தந்ததுற்கு மிகவும் நன்றி.உங்கள் தமிழ் சேவை என்னை போல அறுவியல் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக இருகின்றது.
ஜயா நான் உங்கள் இடம் ஒரு வேண்டுகோள் சமர்பிக்றேன் , கடந்த மாதம் interstellar படத்தை பார்தேன் மிகவும் நன்றாக இருந்தது, அனால் பல பேருக்கு இந்த படத்தில் ஆர்வம் இல்லை. ஆனால் இது ஒரு நல்ல விண்வெளி மற்றும் அண்டவியல் பற்றிய படம் என்பதால் இப்படத்தை பற்றி நீங்கள் ஒரு விமர்சனம் அல்லது கட்டுரை வரைந்தால் மிகவும் உபயோகமாக இறுக்கும், அது மாணவர் மற்றும் இளைஞர்களுக்கு விண்வெளி பற்றிய ஆர்வத்தை தூண்டும்.
Note: If you see any spelling or grammar mistakes in above paragraphs please forgive me. This is the first time i am trying to write in Tamil.
நன்றி,
பாலாஜி
பாலாஜி
தங்களது பாராட்டுரைகளுக்கு மிக்க நன்றி.அறிவியல் மீதான ஆர்வத்தைத் தூண்டும் நோக்கில் தான் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. அதில் ஓரள்வுக்கேனும் பலன் இருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
தாங்கள் ஒரு ஹாலிவுட் சினிமாப் படம் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அந்த சினிமாப் படம் பற்றி நான் விமர்சனமோ கட்டுரையோ எழுதுவது பொருத்தமாக இராது. அப்படி எழுதுவதாக இருந்தால் எதிர்காலத்தில் இப்படியான படங்கள் பற்றி எழுத வேண்டி வரும்.
தங்களுக்கு விண்வெளி அண்டவெளி இயல் பற்றி சந்தேகம் இருந்தால் எழுதுங்கள். முடிந்த அளவில் விளக்கம் அளிக்கிறேன். என்னால் அது தான் செய்ய முடியும்.
ஐயா
தங்களின் விளக்கங்கள் அருமை எனது கேள்வி
பூமி சுழலுவது நின்றால் என்ன நடக்கும் ?? ஏன் பூமி சுழல வேண்டும் ???
Siva Ram
பூமி தோன்றிய காலத்தில் அது சுழல் ஆரம்பித்தது. அந்த சுழற்சியைத் தடுக்க இயற்கை சக்தி எதுவும் இல்லை. ஆகவே பூமி தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கும். பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு அதன் சுழற்சி வேகம் ஒரு வேளை சற்றே குறையலாம். ஆனால் பூமி சுழல்வது நிற்காது. அது தொடர்ந்து சுழன்று வரும்.
http://image.gsfc.nasa.gov/poetry/ask/q1168.html
hello sir, if the speed of the earth decreases after some more billion years means...then it should stop after some billion of billion years ??
Parthiban CB
தாங்கள் பூமியின் சுழற்சி வேகத்தைக் குறிப்பிடுவதாக நினைக்கிறேன். உள்ளபடி சந்திரன் நம்மை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் சென்று கொண்டிருக்கிற்து. இதன் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரிக்கும். ஆகவே பல கோடி ஆண்டுகளூக்குப் பிரகு நீங்கள் கருதுவதற்கு நேர் மாறான் நிலை தான் இருக்கும்.
Thanks a lot sir,can you pls explain these in your leisure time...
I) why moon going far away from earth?
ii) what is the maximum distance cover by moon from earth?
iii)if the rotating speed of earth speed is increased, then it is possible to live in earth?
Parthiban CB
பல கோடி ஆண்டுகளாகவே பூமியிடமிருந்து சந்திரன் விலகி வருகிறது. ஏதோ ஒரு காலகட்டத்தில் பூமியிடமிருந்து சந்திரன் 22 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. இப்போது அதிகபட்சமாக சுமார் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சந்திரன் விலகிச் செல்வதால் பூமியின் சுழற்சி வேகம் குறையும். ( அது தான் சரி. ) இதன் விளைவாக பூமி தனது அச்சில் ஒரு தடவை சுற்றி முடிப்பதற்கான காலம் அதிகரிக்கும். இப்போது ஒரு நாள் என்பது சுமார் 24 மணி நேரமாக உள்ளது. பூமி தனது அச்சில் ஒரு தடவை சுற்றி முடிப்பதற்கு ஆகும் நேரமே ஒரு நாள் ஆகும். எதிர்காலத்தில் இந்த நேரம் மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே போகும். கணிசமான வித்தியாசம் ஏற்படவே பல கோடி ஆண்டுகள் ஆகும்.
well said sir, thanks a lot.
Post a Comment