கூகுள் என்றால் பெரும்பாலோருக்குத் தெரியும். கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆலன் யுஸ்டாஸ் (Alan Eustace) (வயது57 ) இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவர் ஒரு கம்ப்யூட்டர் விஞ்ஞானி.
கீழே குதித்தது சரி, அவர் எப்படி அவ்வளவு உயரத்துக்குச் சென்றார்? ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட ஒரு பிரும்மாண்டமான பலூனின் அடிப்புறத்தில் அவர் இணைக்கப்பட்டிருந்தார். ஹீலியம் வாயுவானது காற்றை விட லேசானது. ஆகவே பலூன் தானாகவே மேலே மேலே சென்று கொண்டே இருக்கும்.
வானில் மிக உயரத்திலிருந்து கீழே பார்த்தால் எல்லாமே பிரமிப்பூட்டுவதாக இருக்கும். பரவச உணர்வு ஏற்படும். ஆனால் 11 கிலோ மீட்டர் உயரத்துக்குப் போனால் குளிர் மைனஸ் 11 டிகிரி அளவுக்கு இருக்கலாம். சுவாசிக்கப் போதுமான காற்று கிடைக்காது. மயக்கம் வரும். விரைவில் மரணம் ஏற்படும்.
விசேஷ காப்பு உடையில் அந்தரத்தில் யுஸ்டாஸ் |
பலூன் அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள ரோஸ்வெல் என்னுமிடத்திலிருந்து 24 ஆம் தேதி காலை 7 மணிக்கு உயரே கிளம்பியது. சுமார் 2 மணி 7 நிமிஷங்களுக்குப் பிறகு பலூன் 1,35,890 அடி ( 41,420 மீட்டர்) உயரத்தை எட்டியது.
ஹீலியம் நிரப்பப்பட்ட ராட்சத பலூனின் நுனியில் யுஸ்டாஸ்( Courtesy:Paragon Space Development Corporation) |
இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உலக சாதனை படைத்த பெலிக்ஸ் பாம் கார்ட்னர் எட்டிய உயரத்தை விட சுமார் இரண்டு கிலோ மீட்டர் அதிகம்.
யுஸ்டாஸ் தமது அனுபவம் பற்றிப் பின்னர் கூறுகையில் " அற்புதமான அனுபவம். அங்கிருந்து பார்த்த போது வானம் காரிருளாக இருந்தது. கீழே காற்று மண்டல அடுக்குகள் தெரிந்தன ” என்றார்.
சாதனை படைக்கும் உயரத்துக்குச் சென்றதும் அவர் பலூனிலிருந்து தம்மைத் துண்டித்துக் கொண்டார். பூமியின் ஈர்ப்பு சக்தியின் விளைவாக அவர் கீழ் நோக்கி விழலானார். உயரே தூக்கிப் போட்ட கல் எப்படி பூமியை நோக்கி விழுமோ அது போல அவர் கீழ் நோக்கி வேகமாக விழலானார்.
சுமார் நாலரை நிமிஷம் அவர் இப்படி கீழ் நோக்கி இறங்கிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவர் மணிக்கு 1321 கிலோ மீட்டர் வேகத்தில் விழுந்து கொண்டிருந்தார். உண்மையில் இது பயங்கர வேகமே.
தரையிலிருந்து சுமார் 5400 மீட்டர் உயரத்தில் பாரசூட் விரிந்து கொண்டது. அதன் பிறகு அவர் கீழ் நோக்கி இறங்கும் வேகம் மிகவும் குறைந்தது. அவர் வானை நோக்கிக் கிளம்பிய இடத்திலிருந்து சுமார் 113 கிலோ மீட்டர் தள்ளி ஓரிடத்தில் மெல்லத் தரை இறங்கினார்.
யுஸ்டாஸ் வானிலிருந்து குதிப்பது இது முதல் தடவை அல்ல. இந்த விஷயத்தில் அவருக்கு முன்னரே நல்ல பயிற்சி உண்டு. தவிர, அவருக்கு விமானங்களை ஓட்டும் அனுபவமும் உண்டு.
சுமார் 34 மாத காலம் தொடர்ந்து நடந்து வந்த ஏற்பாடுகளின் பலனாகவே யுஸ்டாஸினால் உலக சாதனை படைக்க முடிந்தது. இதில் அவருக்கு உதவிகளையும் ஏற்பாடுகளும் செய்வதில் ஒரு பெரிய படையே செயல்பட்டது.
முன்னர் 2012 ஆம் ஆண்டில் பாம் கார்ட்னர் சாதனை நிகழ்த்திய போது பிரபல மென்பான நிறுவனம் முன்னின்று எல்லா செலவுகளையும் ஏற்றுக்கொண்டது. ஆனால் யுஸ்டாஸ் தமது சொந்த ஏற்பாட்டின் மூலமே தமது முயற்சியை மேற்கொண்டார்.
இதற்கு முன்னர் 2012 அக்டோபரில் பாம் கார்ட்னர் நிகழ்த்திய சாதனை பற்றிய விவரம் காண்க: 39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால்....
யுஸ்டாஸ் தமது அனுபவம் பற்றிப் பின்னர் கூறுகையில் " அற்புதமான அனுபவம். அங்கிருந்து பார்த்த போது வானம் காரிருளாக இருந்தது. கீழே காற்று மண்டல அடுக்குகள் தெரிந்தன ” என்றார்.
சாதனை படைக்கும் உயரத்துக்குச் சென்றதும் அவர் பலூனிலிருந்து தம்மைத் துண்டித்துக் கொண்டார். பூமியின் ஈர்ப்பு சக்தியின் விளைவாக அவர் கீழ் நோக்கி விழலானார். உயரே தூக்கிப் போட்ட கல் எப்படி பூமியை நோக்கி விழுமோ அது போல அவர் கீழ் நோக்கி வேகமாக விழலானார்.
சுவாசக் கருவி அணிந்தவராக தலைக் கவசத்துக்குள் யுஸ்டாஸ் |
தரையிலிருந்து சுமார் 5400 மீட்டர் உயரத்தில் பாரசூட் விரிந்து கொண்டது. அதன் பிறகு அவர் கீழ் நோக்கி இறங்கும் வேகம் மிகவும் குறைந்தது. அவர் வானை நோக்கிக் கிளம்பிய இடத்திலிருந்து சுமார் 113 கிலோ மீட்டர் தள்ளி ஓரிடத்தில் மெல்லத் தரை இறங்கினார்.
யுஸ்டாஸ் வானிலிருந்து குதிப்பது இது முதல் தடவை அல்ல. இந்த விஷயத்தில் அவருக்கு முன்னரே நல்ல பயிற்சி உண்டு. தவிர, அவருக்கு விமானங்களை ஓட்டும் அனுபவமும் உண்டு.
பாராசூட் உதவியுடன் தரை இறங்கும் கட்டத்தில் யுஸ்டாஸ் (courtesy; Paragon Space Development Corporation) |
முன்னர் 2012 ஆம் ஆண்டில் பாம் கார்ட்னர் சாதனை நிகழ்த்திய போது பிரபல மென்பான நிறுவனம் முன்னின்று எல்லா செலவுகளையும் ஏற்றுக்கொண்டது. ஆனால் யுஸ்டாஸ் தமது சொந்த ஏற்பாட்டின் மூலமே தமது முயற்சியை மேற்கொண்டார்.
இதற்கு முன்னர் 2012 அக்டோபரில் பாம் கார்ட்னர் நிகழ்த்திய சாதனை பற்றிய விவரம் காண்க: 39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால்....
6 comments:
So still பாம் கார்ட்னர் has the record of fastest fall?
ஐயா, சில சந்தேகங்கள்..
அவரை மேலே கொண்டுசென்ற பலூன் அவரிடமிருந்து பிரிந்த பின் என்னவாகியிருக்கும்?
41 கிமீ யில் சூரிய வெளிச்சம் எப்படி இருக்கும்?
41 கிமீ வரை செல்லக்கூடிய இதர பொருட்கள் / உயிரினங்கள் ஏதேனும் உள்ளனவா?
SIV
41 கிலோ மீட்டர் உயரத்தில் சூரியன் நல்ல பிரகாசமாகத்தான் தெரியும். அதே சமயத்தில் சூரியனிலிருந்து வரும் ஆபத்தான் கதிர்கள் ஒருவரைத் தாக்கும்.( அந்த ஆபத்தான கதிர்களைக் காற்று மண்டலம் தடுத்து விடுவதால் நமக்கு ஆபத்து இல்லை)
அவ்வளவு உயரம் சென்ற பலூன் மேலும் உயரே சென்றால் அனேகமாக வெடித்து விடும். இது அந்த பலூனுக்குள் இருக்கின்ற வாய்வின் அழுத்தம், அந்த உயரத்தில் இருக்கின்ற வெப்பம், பலூன் எதனால் ஆனது என பல அம்சங்களைப் பொருதது.
எந்த உயிரினமும் தானாக அவ்வளவு உயரம் செல்ல முடியாது.
shan
நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. Fastest free fall record பாம்கார்ட்டனரிட்ம தான் உள்ளது. உயரத்தைப் பொருத்தவரையில் யுஸ்டாஸ் புது சாதனை படைத்துள்ளார்.
இப்படியான சாதனை முயற்சிகளில் ஈடுபடுவதற்கு ஆகும் செலவு பல கோடி ரூபாய் அளவில் இருக்கும்.
ஐயா வணக்கம்
சில அடி உயரத்தில் (கிணறு நீச்சல்குளம்) இருந்து குதித்தாலே தலை கிறுகிறுக்கும் அப்படியிருக்க 41 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குத்திதால் எப்படி தன்னைக் கட்டுப்படுத்த முடியும் அதுவும் 1321 கிலோ மீட்டர் வேகத்தில் விழுவதென்பது ,அவ்வளவு வேகத்தில் ஒரு வாகனத்தை கட்டுப்படுத்துவது என்பது கூட அவ்வளவு சுலபம் அல்லவே ஐயா பொதுவாக ஹீலியம் பலூன் மூலமாக அதிகபட்சமாக எவ்வளவு உயரம் செல்லமுடியும்.
வெங்கடேஷ்
வெங்கடேஷ்
இவ்விதம் மிக உயரத்திலிருந்து குதிப்பதற்கு நிறைய பயிற்சி தேவை.
ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன் (ஆளில்லாதது) இதுவரை சென்ற அதிக பட்ச உயரம் 53 கிலோ மீட்டராகும். ஜப்பானில் 2002 ல் இது சாதிக்கப்பட்டது.
இப்படியான பலூன் மூலம் விண்வெளிக்குச் செல்ல முடியாது.
Post a Comment