Pages

Oct 1, 2014

நான்காவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் அறிவியல்புரம்

அறிவியல்புரம் வலைப் பதிவு தொடங்கி இன்றுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகி இப்போது நான்காவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

இந்த மூன்று ஆண்டுகளில் சீரான வளர்ச்சி கண்டுள்ளது. படிக்கப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தாண்டியுள்ளது. முற்றிலும் அறிவியல் தொடர்பான வலைப்பதிவுக்கு ஓரளவில் இது சாதனையே.

உலகெங்கிலும் சுமார் 40 நாடுகளில் அறிவியல்புரத்துக்கு வாசகர்கள் உள்ளனர் என்பது பெருமை தருகின்ற விஷயம். அவர்கள் அனைவரும் தமிழர்கள், அறிவியலில் ஆர்வம் கொண்டவர்கள். இது மிக்க மகிழ்ச்சியை அளிப்பதாகும். வருகிற ஆண்டுகளில் இந்த வலைப்பதிவு மேலும் ஆதரவைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

- ராமதுரை

33 comments:

  1. நன்றி மற்றும் பாரட்டுக்கள் ஐயா . மேலும் இதேப்போல பல அறிவியல் கட்டுரைகள் தொடர வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  2. Best Wishes... Keep Going

    -Ram

    ReplyDelete
  3. All the best...Same time expecting more posts..

    ReplyDelete
  4. மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா. உங்கள் சேவை பல்லாண்டு தொடர வேண்டும். - சிவா

    ReplyDelete
  5. ஐயா வணக்கம்

    தங்களுக்கும் தங்களின் இந்த சேவைக்கும் எங்களின் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும், தாங்கள் மென்மேலும் பல அறிவியல் விண்வெளி சார்ந்த கட்டுரைகளை எங்களுக்கு வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

    வெங்கடேஷ்

    ReplyDelete
  6. Congratulations. And many thanks too. Very rare to see good useful articles like you write in simple language. God bless!!

    ReplyDelete
  7. வாழ்த்துகள், தங்களின் எழுத்து நடையில் மிகவும் எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது, தினசரி ஒரு பதிவு வெளியிட்டால் மேலும் நிறைய தெரிந்து கொள்ளலாம், அது சிறிய பதிவாக இருந்தாலும் கூட சுவாரசியமாக இருக்கும்

    ReplyDelete
  8. Thomas Ruban , Ram,வெங்கடேஷ்,சுபத்ரா,pvr ,Arulmani nadar,
    வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.திரு அருள்மணி நாடார் அவர்களின் கோரிக்கையைப் புரிந்து கொள்ள முடிகிறது. தினமும் இல்லாவிட்டாலும் வாரம் இரு முறையாவது கட்டுரை அளிக்கப் பார்க்கிறேன்

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள். பல்லாண்டுகள் சேவை தொடர வேண்டும்.

    ReplyDelete
  10. இன்னும் பல்லாண்டுகள் உங்கள் பணி அறிவியல்புரத்தில் தொடர வாழ்த்துக்கள்.இதுவரை தந்த அறி[வியல்புரத்து]விக்கு நன்றிகள்.

    ReplyDelete
  11. GREAT SERVICE TO WORLD TAMILS! VERY USEFUL AND EDUCATIVE/INFORMATIVE! GREETINGS FROM NORWAY! PLEASE WRITE MORE!

    ReplyDelete
  12. திரு இராமதுரை சார் அவர்களுக்கு,
    இன்று நான்காவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தங்களது அறிவியல்புரம் மென்மேலும் வளர்ச்சியுற்று உன்னதமான நிலையையடைய எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்...
    இதன்மூலம், அறிவியல் தொடர்புடைய கருத்துக்களை எங்களுக்கு வாரிவழங்கிக் கொண்டிருக்கும் தங்களுக்கு நோயற்ற வாழ்வினையும்,நீண்ட ஆயுளையும், இறைவன் என்றென்றும் வழங்க வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.

    நன்றி...

    சு.சிவகுமார்
    கோட்டயம்
    கேரளா
    அலைபேசி: +91 98474 58254
    மின்னஞ்சல் : s.shivakumar@qrs.in


    ReplyDelete
  13. நன்றி மற்றும் பாரட்டுக்கள் ஐயா.

    ReplyDelete
  14. பொன்.முத்துக்குமார்October 02, 2014 10:28 PM

    மெய்யாகவே இது ஒரு அற்புதம்தான். தளராத ஆர்வத்தோடு தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் உங்களுக்கு எங்களது சல்யூட்.

    உங்களது கட்டுரையை ஆதாரமாகக்கொண்டு எங்கள் அலுவலக சகாக்களோடு உரையாடுவதுண்டு. குறிப்பாக க்ரையோஜெனிக் தொழில் நுட்பம், பி.எஸ்.எல்.வி இன்னபிற குறித்து. அதுகுறித்தான தெளிவு பெற உதவியதற்கும் நன்றிகள் பல.

    தொகுத்து புத்தகங்களாக வெளியிட ஆவன செய்யவும். வாங்கி படித்து பாதுகாக்க உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  15. பொன்.முத்துக்குமார்October 02, 2014 10:29 PM

    எனது நூல்வெளியீட்டுக்கோரிக்கை, சமீபத்தைய கட்டுரைகள் தொடர்பாக.

    நன்றி.

    ReplyDelete
  16. பொன்.முத்துக்குமார்
    பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. கட்டுரைகள் நூல் வடிவில் வெளிவர வேண்டும் என விருப்பம் தெரிவித்திருக்கிறீர்கள். நல்ல யோசனை. இதை கவனத்தில் கொள்கிறேன்.
    ராமதுரை

    ReplyDelete
  17. வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  18. Badri Seshadri
    வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  19. Shan Nalliah / GANDHIYIST
    நார்வே நாட்டிலிருந்து நல்லுள்ளம் படைத்த தங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் அய்யா, தொடரட்டும் அருமையான பணி.......!

    ReplyDelete
  21. அற்புதமான அறிவு பயணம் .மிகுந்த உழைப்புக்கு வாழ்த்துக்கள் ஐயா. இறையருள் உங்களை வழிநடத்தட்டும் .

    ReplyDelete
  22. தாங்கள் எல்லா நலமும் பெறவும் இந்தத் தளம் சிறக்கவும் இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. வணக்கம் ஐயா,

    உங்களது இந்தப்பணி மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.
    நான் நெடுங்காலமாக தேடிகொண்டிருந்த பல கேள்விகளுக்கான விளக்கங்களை சுவாரசியமாக தெளிவுபடுத்தியிருக்கின்றீர்கள்.
    நீங்கள் இவ்வளவு காலமும் பகிர்ந்துகொண்ட அறிவியல் கட்டுரைகளுக்காக எனது நன்றிகள்.

    நன்றி.

    ReplyDelete
  24. Congratulations! expecting more and more articles from you sir.

    Venkadesh
    Nagercoil

    ReplyDelete
  25. ஐயா என்னுடைய சிறு வயதில் சில நேரங்களில் வித்தியாசமான கேள்விகளும் யோசனைகளும் நிறைய வரும். எடுத்து காட்டாக. பூமி சுத்துது சொல்றாங்க. நம்ம ஏன் சுத்தாம இருக்கோம். கிரகம் னா என்ன? அதுலாம் வானத்தில் இருக்கு. நாம ஏன் கோயிலுக்கு போறோம். இந்த மாதிரி பல. அப்புறம் நானும் வளந்தேன். எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் பால்வெளி பற்றி தெரிய ஆரம்பித்தது...

    ஒரு நாள் எதார்த்தமாக கூகுள் ல தமிழில் ஏதாவது தகவல் கிடைக்குமா என தேடும் போது முதல் வரிசையில் அறிவியல்புரம் வந்தது.

    அதுக்கப்புறம் சொல்லனுனா நெறைய இருக்கு... சிம்பிளா சொல்லனுனா இப்ப நான் நெறைய பேருக்கு சொல்லி குடுக்கிறேன். உங்களுக்கு நன்றி ஐயா. நன்றி விட வேறு எது உயர்வாக இருக்கோ அத உங்களுக்கு சமர்பிக்கிறேன்.

    ReplyDelete
  26. Pavattakudi Ganesh
    உங்களுடைய அடிமனதிலிருந்து வந்திருக்கும் உணர்வுடன் கூடிய நன்றி என்ற சொல்லை விட மேலானது எதுவுமில்லை.

    ReplyDelete
  27. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா . அனைவரும் புரிந்து கொள்ளும்படியான உங்கள் கட்டுரைகள் பாராட்டுக்குரியவை,தொடருங்கள் .

    ReplyDelete
  28. அன்புடையீர்,
    வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் மீண்டும் நன்றி
    ராமதுரை

    ReplyDelete
  29. வாழ்த்துக்கள் அய்யா.

    ReplyDelete
  30. Respected Sir,

    A great salute to your contribution to Science. It is very easy when we read it in our Mother Tongue. I have not come across any such site which narrates in such a simple language and even a lay man can easily understand. HATS OFF TO YOU SIR.

    Wish this continues...........All The Best.

    Mrs Prabha Sampath,
    Trichy

    ReplyDelete