வெள்ளி வியாழன் இரண்டுமே மற்ற கிரகங்களைக் காட்டிலும் பிரகாசமானவை என்பதால் இக்காட்சி ரம்மியமாக இருக்கும். சென்னையில் மற்றும் தமிழகத்தில் சூரிய உதயம் சுமார் 5-45 மணிக்கு இருக்கும் (சென்னையில் காலை 5-54 மணி ) என்பதால் 5 மணிக்கே எழுந்து பார்ப்பது நல்லது.
படத்தில் கீழே இருப்பது வெள்ளி. மேலே இருப்பது வியாழன். படம்; stellarium |
நம் பார்வையில் இரு கிரகங்களும் அருகருகே தோன்றினாலும் இரண்டும் வெவ்வேறு தொலைவில் உள்ளன, வெள்ளி கிரகம் 24 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள்து. வியாழன் கிரகமோ 93 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சூரிய மண்டலத்தில் வெள்ளி கிரகம் இரண்டாவது வட்டத்தில் இருந்தபடி சூரியனை சுற்றுகிறது.. வியாழன் கிரகம் ஐந்தாவது வட்டத்தில் இருந்தபடி சூரியனை சுற்றுகிறது.
இந்த இரண்டு கிரகங்களூக்கும் மேலே தேய் பிறைச் சந்திரனைக் காணலாம்.
1 comment:
ஐயா வணக்கம்
வெள்ளி கிரகம் சூரியனுக்கு அருகில் இருந்தும் அதனுடைய சுழற்சி வேகம் (ஒரு நாள்) மிகவும் மெதுவாக இருக்கிறதே ஏன்?
வெங்கடேஷ்
Post a Comment