செவ்வாய், சனி ஆகிய இரண்டு கிரகங்களையும் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கு வானில் காணலாம்.
வானில் நம்மால் மொத்தம் ஐந்து கிரகங்களை மட்டுமே வெறும் கண்ணால் பார்க்க முடியும். மேலே கூறியபடி நான்கு கிரகங்களை மட்டுமே இப்போது நம்மால் காண இயலும். ஐந்தாவதான வியாழன் கிரகம் இப்போது பகலில் சூரியனுக்கு அருகே அமைந்திருப்பதால் அதைக் காண இயலாது.
அதிகாலையில் கிழக்கு வானை நோக்கினால் வெள்ளி கிரகம் கண்ணில் படாமல் போகாது. அது வைர மூக்குப் பொட்டு போல ஜொலிக்கும்.தமிழில் இதற்கு விடிவெள்ளி என்ற பெயரும் உண்டு
எது நட்சத்திரம் எது கிரகம் என்று தெரியாத காலத்தில் மேலை நாட்டவர் வெள்ளி கிரகத்துக்கு Morning Star என்று பெயர் வைத்தனர் ( கிரகங்களுக்கு சுய ஒளி கிடையாது. அவை சூரிய ஒளியைப் பிரதிபலிப்பவை. நட்சத்திரங்கள் சுய ஒளி கொண்டவை. சூரியனைப் போல பல மடங்கு பெரியவை)
கிழக்கு வானைக் காட்டும் இப்படத்தில் புதன் ( Mercury), வெள்ளி (Venus) ஆகிய இரு கிரகங்களைக் காணலாம். வலது புறத்தில் சிவந்த நிறத்தில் திருவாதிரை (Betelguese) நட்சத்திரமும் தென்படும் (Stellarium) |
வெள்ளி கிரகம் சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புதன் 16 கோடி கிலோ மீட்டர். திருவாதிரை நட்சத்திரம் 497 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.(ஒளியாண்டு பற்றிய விள்க்கம் கீழே காண்க)
நீங்கள் மாலையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கே நோக்கினால் சிவந்த நிறத்தில் செவ்வாய் (Mars) தென்படும். இக்கிரகம் தற்போது பூமியிலிருந்து சுமார் 21 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
அதன் அருகிலேயே அதாவது செவ்வாய்க்கு சற்று கீழே சித்திரை (Spica) நட்சத்திரமும் தெரியும். இந்த நட்சத்திரம் சுமார் 24 ஒளியாண்டு தொலைவில் உள்ளது
மேற்கு வானம். செவ்வாய்க்கு கீழே சித்திரை நட்சத்திரம் உள்ளது இடது மூலையில் சனி கிரகம் காண்க (Stellarium) |
சனி கிரகத்திலிருந்து வலது புறம் தள்ளி பிரகாசமான நட்சத்திரம் தெரியும். அது தான் சுவாதி (Arcturus) நட்சத்திரமாகும். அது 36 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.
குறிப்பு: ஒளியானது ஒரு வினாடியில் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவு செல்லக்கூடியது. ஓராண்டில் ஒளி செல்லக்கூடிய தூரமே ஒளியாண்டு ஆகும். இதன்படி ஒளியாண்டு என்பது தூரத்தைக் குறிப்பதாகும். ஓர் ஒளியாண்டு என்பது 9,46,073 கோடி கிலோ மீட்டர் தூரமாகும்.
ஐயா வணக்கம்
ReplyDeleteசூரியனைச் சுற்றி கிரகங்கள் சுற்றி வருவது என்பது இயற்கையின் விதிதான் ஆனாலும் எந்தவித ஊந்துச்க்தியும் இயந்திரமும் இல்லாமல் இவ்வளவு ஒழுங்காக சுற்றிவருவது மிகவும் விசித்திரமாக இருக்கிறது. சூரியனின் ஈர்ப்பு விசையால் தான் கிரகங்கள் அதை சுற்றிவருகிறது ஆனாலும் ஒரு சந்தேகம் ஐயா பலகோடி கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் நெப்டியூன் கிரகம் சூரியனின் ஈர்ப்பு விசையால் அதற்குள் போய் விழுந்துவிடாது ஏனென்றால் நெப்டியூன் கிரகம் சூரியனுக்கு மிகவும் தொலைவில் உள்ளது அதனால் சூரியனின் ஈர்ப்பு விசை நெப்டியூன் கிரகம் மீது குறைவாக இருக்கும் அதனால் அது சாத்தியமாக இருக்கலாம் ஆனால் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் மெர்குரி கிரகத்திற்கு சூரியனின் ஈர்ப்பு விசை மிகவும் அதிகமாகத்தானே இருக்கும் ஆனாலும் மெர்குரி போன்று சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகங்கள் சூரியனுக்குள் போய் விழாமல் இருக்கிறதே இதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா ஐயா
வெங்கடேஷ்
வெங்கடேஷ்
ReplyDeleteநியாயமான கேள்விதான். ஓடிப் பிடித்து விளையாடுகையில் பிடிப்பவர் அருகே இருந்தால் மற்றவர்கள் பிடிபடாமல் இருக்க வேகமாக ஓடுவார்கள். சற்றே தள்ளி இருப்பவர்கள் மெதுவாக ஓடிக் கொண்டிருப்பார்கள். கிரகங்கள் கதையும் அப்படித்தான்.
நெப்டியூன் மிகத் தொலைவில் இருப்பதால் அது தனது பாதையில் மெதுவாகச் செல்கிறது. அதாவது மெதுவாக சூரியனை சுற்றுகிறது. நெப்டியூன் கிரகத்தின் வேகம் மணிக்கு சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர். சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ள புதன் கிரகம் தனது சுற்றுப்பாதையில் மணிக்கு சுமார் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. சில் சமயங்களில்அதற்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் குறைவாக இருக்கும். அப்போது புதன் கிரகத்தின் வேகம் மணிக்கு சுமார் 2 லட்சம் கிலோ மீட்டர். இந்த வேகம் காரணமாகத்தான் அது சூரியனில் போய் “விழாமல்” இருக்கிறது.
Sir, just would like to know more about light years as you said about the star Betelguese. What we see on the sky right now is 457 years old star is it? If the star suddenly disappear for some reason right this moment, we will know only 457 years later right?
ReplyDeleteAnonymous
ReplyDeleteYou are absolutely correct. திருவாதிரை நட்சத்திரம் 643 ஒளியாண்டு தொலைவில் (Plus or minus 146 years) உள்ளதாகவும் ஒரு கணக்கு உண்டு. அவ்வளவு ஆண்டுகளுக்கு முன்னர் திருவாதிரை நட்சத்திரத்திலிருந்து கிளம்பிய ஒளியைத் தான் நாம் இன்று காண்கிறோம். நாம் பார்க்கின்ற நேரத்தில் அது அங்கு இருக்கிறதா என்பது தெரியாது.இதையே வேறு விதமாகச் சொன்னால் திருவாதிரையை நாம் பார்க்கும் போது கடந்த காலத்தைக் காண்பவர்களாக இருக்கிறோம்.
என்றோ ஒரு நாள் வெடிக்கப் போகிற நட்சத்திரங்களில் திருவாதிரையும் ஒன்று. கடந்த ஆண்டில் என்று நினைக்கிறேன், திருவாதிரை வெடிக்கப் போவதாக ஒரு வதந்தி கிளம்பியது. சில நிபுணர்களின் கருத்துப்படி இன்னும் 10 லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் திருவாதிரை வெடிக்கும்.
அருமை.
ReplyDeleteசென்னையிலிருந்து திருச்சி ரயில் பயணத்தில், விடிவெள்ளியைப் பார்ப்பது இனிமையான அனுபவம்
தாங்கள் கூகுள் ஸ்கை மேப் பற்றி எழுதவேண்டும். சிறு குழந்தைகள் அதை வைத்து எளிதாக கிரகங்களையும் நட்சத்திரக் கூட்டங்களையும் கண்டறிகிறார்கள்.
ரொம்ப அருமையான தகவல்களை, அழகாக சொல்லி இருக்கீங்க, உங்கள் தளம் நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதவும். எந்த மாதிரியான டெலஸ்கோப் மூலம் நாம சனி கிரகத்தின் வலையங்கல பாக்க முடியும். இந்த பிளாக் வரவங்க நிறைய பேர் டெலஸ்கோப் வாங்க ஆசப்படலாம். தகவல் கிடைத்தால் சொல்லுங்க...
ReplyDeleteRajkumar
ReplyDeleteபாராட்டுகளுக்கு நன்றி. டெலஸ்கோப் விஷயத்தில் ஆலோசனை கூற இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.