மே 26 ஆம் தேதியன்று மேற்குத் திசையில் அடிவானத்துக்கு சற்று மேலே வியாழன், வெள்ளி, புதன் ஆகிய மூன்றும் இவ்விதமாகக் காட்சி த்ரும் நன்றி: நாஸா |
இந்த மூன்றில் மிகப் பிரகாசமானது தான் வெள்ளி.(Venus) அதன் அருகே பிரகாசம் குறைந்ததாகத் தெரிவது வியாழன்.(Jupiter) இந்த இரண்டு கிரகங்களையும் எளிதில் வெறும் கண்ணால் பார்க்க முடியும்.
இந்த இரண்டுக்கும் அருகே மிக மங்கலான் புள்ளியாகத் தெரிவது புதன் கிரகம். ( Mercury).பொதுவில் புதன் கிரகம் கண்ணில் தென்படுவது அபூர்வம். மிக மங்கலாக இருப்பதே அதற்குக் காரணம்.எனினும் கூர்ந்து கவனித்தால் தெரியும். பைனாகுலர்ஸ் மூலம் பார்த்தால் புதனை நன்கு காண முடியும்.ஆனால் வெள்ளியையும் வியாழனையும் பார்க்க பைனார்குலர்ஸ் தேவையில்லை.
மே 26 ஆம் தேதிக்கு முன்னர் அல்லது பின்னர் இந்த மூன்றையும் காண முடியாதா என்று கேட்கலாம். வியாழனையும் வெள்ளியையும் காண இயலும். வானில் புதன் விரைவில் நகருவதாகும். ஆகவே பிற நாட்களில் அது இடம் தள்ளிக் காணப்படும்
இந்த மூன்று கிரகங்களில் வியாழன் பூமியிலிருந்து சுமார் 90 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வெள்ளி சுமார் 25 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும் புதன் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளன
.
வியாழனுடன் ஒப்பிட்டால் பூமி, வெள்ளி, புதன் ஆகிய கிரகங்கள் எவ்வளவு சிறியவை என்பதை இந்த வரைபடம் விளக்குகிறது. |
சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் எல்லாமே சூரியனைச் சுற்றி வ்ருகின்றன.தத்தம் சுற்றுபபாதையில் வெவ்வேறு வேகத்தில் சுற்றும் கிரகங்கள் அபூர்வமாக ஒன்றன் பின் ஒன்றாக அமையும் போது வானில் அவை ஒரே பகுதியில் ஒன்று கூடி நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.
Update: 27th May 2013
கீழே உள்ள போட்டோ புதன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்று கிரகங்களையும் காட்டுகிறது. போலந்து நாட்டில் உள்ள Szubin நகரைச் சேர்ந்த Marek Nikodem மே 26 ஆம் தேதி மாலையில் இந்த போட்டோவை எடுத்தார்.( படம் நன்றி spaceweather com
போட்டோவில் கீழ்ப்புறத்தில் இருப்பது வெள்ளி (Venus) இடது புறம் இருப்பது வியாழன் ( Jupiter).மேற்புறத்தில் இருப்பது புதன் ( Mercury).
12 comments:
விளக்கங்களுக்கு நன்றி ஐயா...
வணக்கம் ஐயா.
தகவல்கள் மிகவும் எழிமையாகவும் பயனுள்ளதாகவும் உள்ளன , குறிப்பாக high school மாணவர்களுக்கு பாடத்திட்டத்தையொட்டி உள்ளன.
மிக்க நன்றி.
கே.எம்.அபுபக்கர்,
கல்லிடைக்குறிச்சி
ஐயா ,
இந்த கட்டுரையை படிக்கும்போது திரு.எம்.மாணிக்கராஜ் அவர்கள் 06 05 2013 ந்
தேதியிட்ட கடிதத்தில் கோரிய ஆசை ( பிரபஞ்சம் பற்றிய தொடர் கட்டுரை ) நிறைவேறும் வாய்ப்பு உள்ளதாகவே நான் நம்புகிறேன். நன்றி.
கே.எம்.அபுபக்கர்,
கல்லிடைக்குறிச்சி.
பதிவுக்கு மிக்க நன்றி ஐயா
S.சுதாகர்
Thank you very much sir for sharing.
வணக்கம் ஐயா , தங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன் , எனக்கு ஆங்கிலத்தில் அவளவாக புலமை இல்லை , தமிழில் இந்த மாதிரி ஒரு பக்கம் தேடிக்கொண்டிருந்தேன் , உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. நான் ஒரு சிறிய தொலைநோக்கியை { 38mm space launcher } . இது போன்ற நிகழ்வுகளை காணவேண்டுமென்று நான் மிகவும் விருப்பபடுகிறேன் , தங்கள் தொலைபேசி எண் கிடைத்தால் , எனக்கு உதவியாக இருக்கும் .
நன்றி
செ .பாலன் { 7871005003 }
வியாழன் பூமியிலிருந்து சுமார் 90 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வெள்ளி சுமார் 25 கோடி கிலோ மீட்டர் தொலைவிலும் புதன் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளன
sir,
earth-venus distance compare panu pothu earth-mercury athigama thana irukanum?..yen kammiya iruku and earth-sun 149600000 km means earth-venus yapdi 25kodi agamudiyum...sir pls explain me when u free...
sindhya
பூமியிருந்து Venus கிரகம் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள தூரத்தில் இருப்பதற்குக் காரணம் உண்டு. கட்டுரையில் உள்ள இரண்டாவது படத்தைக் கவனிக்கவும் பூமியிலிருந்து புதன் அருகிலும் அதற்கு அப்பால் venus அதிகத் தொலைவிலும் இருப்பதைக் கவனிக்கவும்.
கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. ஆகவே அவை ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு இடத்தில் இருக்கும்.ஆகவே ஏதாவ்து ஒரு சமயத்தில் Venus சூரியனுக்கு மறு புறத்தில் இருக்கின்ற நிலை ஏற்படும். அப்போது அது பூமியிலிருந்து அதிகத் தொலைவில் இருக்கும். இப்போது venus அவ்விதம் அதிகத் தொலைவில் உள்ளது
.
ஆனால்
சூரியன் -- புதன் -- வெள்ளி -- பூமி
என்ற வரிசையில் இந்த கிரகங்கள் இருக்க நேர்ந்தால் அப்போது புதன் கிரகமானது வெள்ளி (Venus) கிரகத்தை விட நீங்கள் கருதுவது போல அதிகத் தொலைவில் இருக்கும்.
தங்களது சந்தேகம் தீர்ந்திருக்கும் என்று கருதுகிறேன்
Thank you very much sir
Finally I got it. I saw it in at 7.00 pm
It was appeared clearly...
But, the time moves mercury dimmed....
So much thank you sir
Thank you very much sir..
Finally I saw it....
It was appeared in 7.00 pm in the sky. The time moves on.....mercury dimmed and disappeared in 7.15 pm.. Others disappeared 7.30 pm. thank you very much I'm glad to meet you thanks for your message..
ஐயா தங்களின் பதிவுகளை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறோம்
வெங்கடேஷ்
நல்ல சுவாரஸ்யமான பதிவுகள். தற்போது தான் தங்கள் வலைப்பூவை பற்றி தெரிந்து கொண்டேன். பல நாள் தேடலுக்கு பின் ஒரு அறிவியல் பற்றின வலைப்பூ பார்க்க கிடைத்தது. பின்தொடர வழி ஏற்படுத்தி வைக்கலாமே. ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பதிவுகளை தவறாமல் படிக்க உதவியாக இருக்கும்.
Post a Comment