பயங்கரவாதிகளைப் பொருத்தவரையில் இந்த உரம் தான் வெடிகுண்டு தயாரிப்புக்கான மூலப் பொருள்.இந்த உரத்தைப் பயன்படுத்தி வெடிகுண்டுகளைத் தயாரித்து அந்த் வெடிகுண்டுகளைப் பொது இடங்களில் சைக்கிள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் வைப்பது தான் பயங்கரவாதிகள் கையாளும் முறையாகும்.
இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளில் மும்பை, ஹைதராபாத். தில்லி, ஜெய்ப்பூர், வாராணசி,பெங்களூர் என பல இடங்களிலும் பயங்க்ரவாதிகள் வைத்த இவ்வித வெடிகுண்டுகள் மூலம் எண்ணற்றவர்கள் உயிரிழந்துள்ளனர். அண்மையில் பெங்களூரில் வெடித்த வெடிகுண்டு அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டே என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் உலகில் 123 நாடுகளில் பயங்க்ரவாதிகள் இவ்விதமான 17 ஆயிரம் வெடிகுண்டுகளைப் யன்படுத்தியுள்ளனர்.ஆப்கனிஸ்தானில் பயங்கரவாதிகள் சர்வ சாதாரணமாக இவ்வித வெடிகுண்டுகளைத் தயாரித்துப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதன் விளைவாக அந்த நாட்டில் அம்மோனியம் நைட்ரேட் உர விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.இந்தியாவிலுm வீரியமிக்க அம்மோனியம் நைட்ரேட் உரங்கள் விஷயத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் 1995 ஆண்டில் ஒகலஹாமா நகரில் இப்படியான வெடிகுண்டு வெடித்ததில் 168 பேர் உயிரிழந்தனர்.2006 ஆம் ஆண்டில் மும்பை நகரில் ப்ல புற நகர் ரயில் வண்டிகளில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததில் 200 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
2006 ஆண்டு மும்மையில் வெடிகுண்டு விளைவாக உருக்குலைந்த ரயில் பெட்டி |
அம்மோனியம் நைட்ரேட்டைப் பயன்படுத்தி இனி வெடிகுண்டு தயாரிக்க முடியாதபடி தடுக்க இப்போது அமெரிக்க நிபுணர் ஒருவர் வழி கண்டுபிடித்துள்ளார். அதாவது அம்மோனியம் நைட்ரேட் உரத்துக்குப் பதில் மாற்றான உரத்தைத் தயாரிக்க முடியும் என்ற் அவர் நிரூபித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த சாண்டியா நேஷனல் லாபரட்டரீஸ் நிறுவனத்தின் எஞ்சினியர் கெவின் பிளெமிங் இப்புதிய உரத்தை உருவாக்கியுள்ளனர்.அம்மோனியம் நைட்ரேட்டுடன் அயர்ன் சல்பேட் என்னும் பொருளைச் சேர்த்தால் அப்பொருள் ஆபத்தற்றதாகி விடுகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளனர்.அதே நிறுவனத்தின் பெண் எஞ்சினியர் விக்கி சாவேஸ் இதைப் பரிசோதித்து இது அவ்விதமானதே என உறுதிப்படுத்தியுள்ளார்.
பெண் எஞ்சினியர் விக்கி சாவேஸ், புதிய உரம் கண்டுபிடித்த பிளெமிங் Credit: Randy Montoya |
தங்களது கண்டுபிடிப்பின் மூலம் தயாரிக்கப்படுகிற உரம் எந்த விதத்திலும் தரம் குறைந்தது அல்ல. சொல்லப்போனால் அதில் கூடுதலாக இரும்புச் சத்து இருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர். தவிர, இப்புது வகை உரத்தைத் தயாரிக்க கூடுதல் செலவு இராது என்றும் கூறியுள்ளனர்.
இனி அடுத்ததாக உர ஆலைகள் இப்புதிய முறைக்கு மாறியாக வேண்டும். புதிய வகை உரம் நல்ல பலன் தரக்கூடியதே என களப் பரிசோதனைகள் மூலம் விவசாயிகளை ஏற்கச் செய்ய வேண்டும்.
Super...
ReplyDeleteதெரிந்து கொள்ளக்கூடிய விசயங்கள்
ReplyDelete