Pages

Nov 1, 2012

பூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா?

பொதுவில் வதந்திகளுக்குப் பதில் கூறுவதில் அர்த்தமே இல்லை.  ஒரு வகையில் அது அந்த வதந்தியை மேலும் பரப்புவதாகவே அமையும். ஆனால் இந்த வலைப் பதிவைப் படித்து வருகிற  ஓர் அன்பர் எனக்கு இந்த் வதந்தி பற்றிக் குறிப்பிட்டு  அது உண்மையா, அப்படி நடக்குமா என்று இ மெயில் மூலம் கேட்டிருந்தார். இது இணைய தளத்தில் பரவலாகக் கிளம்பியுள்ள வதந்தி என்பதால் அவருக்குப் பதிலளித்தேன்.

 அடுத்த மாதம் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பூமி இருளில் மூழ்கிவிடுமாம். அது தான் அந்த வதந்தி. நாஸா இது பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த வதந்தி கூறுகிறது.அன்பர் சுதாகர் எனக்கு இமெயில் மூலம் அனுப்பிய கேள்வியையும் நான் அளித்த பதிலையும் கீழே கொடுத்துள்ளேன். அந்த பதிலுடன் மேலும் சில விளக்கத்தையும் இங்கு சேர்த்திருக்கிறேன்.

”NASA predicts total blackout on 23-25 Dec 2012 during alignment of Universe. US scientists predict Universe change, total blackout of planet for 3 days from Dec 23 2012. It is not the end of the world, it is an alignment of the Universe, where the Sun and the earth will align for the first time. The earth will shift from the current third dimension to zero dimension, then shift to the forth dimension. During this transition, the entire Universe will face a big change, and we will seea entire brand new world. The 3 days blackout is predicted to happen on Dec 23, 24, 25....during this time, staying calm is most important, hug each other, pray pray pray, sleep for 3 nights...and those who survive will face a brand new world....for those not prepared, many will die because of fear. Be happy..., enjoy every moment now. Don't worry, prayto God everyday. There is a lot of talk about what will happen in 2012, but many people don't believe it, and don't want to talk about it for fear of creating fear and panic. We don't know what will happen, but it is worth listening to USA's NASA talk about preparation.

இது உண்மையா?.....உங்களிடமிருந்து இது பற்றிய தகவல்கள் கிடைத்தால் மிக்க மகிழ்ச்சியடைவோம்.”  -சுதாகர்

to Sudhakar
Dear Sir
   நான் அறிந்த வரையில் நாஸா  அப்ப்டி எந்த எச்சரிக்கையையும் விடவில்லை. total blackout  என்பது என்ன என்று புரியவில்லை. உலகில் உள்ள அனைத்து மின்சார நிலையங்களும் மின் உற்பத்தி செய்யாமல் பாதிக்கப்படும் என்ற அர்த்தம் என்றால் அது சாத்தியமில்லை. அனைத்து மின் நிலையங்களும் ஒரே சமயத்தில் செயலற்றுப் போக வாய்ப்பில்லை.

 அல்லது மூன்று நாள் சூரியனே தலை காட்டாது . மூன்று நாளும் ஒரே இருளாக இருக்கும் என்றால் அதற்கும் சாத்தியமில்லை.சூரியன் தனது இடத்திலிருந்து எங்கோ மூன்று நாள் லீவில் போய்விட்டுத் திரும்ப வாய்ப்பில்லை.  பூமி  தனது அச்சில் சுழல்வதால் தான் இரவும் பகலும் ஏற்படுகின்றன.
 
பூமி தனது அச்சில் சுழலாமல் நிலை குத்தி நிற்பதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் பூமியின் ஒரு பாதியில் மூன்று நாள் தொடர்ந்து இரவாக இருக்கும். மறு பாதியில் மூன்று நாள் தொடர்ந்து பகலாக இருக்கும். ஆகவே பூமி முழுவதிலும் மூன்று நாள் இரவாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இது பகுத்தறிவுக்கு முரணானது.
 
சூரியன் மற்றும் பூமியின் alignment  பற்றிய சமாச்சாரமும் அபத்தமாகவே உள்ளது. பூமியின் Dimension  மாற்றம் வெறும் உளறல்.
 நாஸா இப்படி கூறியது அப்படிக் கூறியது என்று வதந்தி கிளம்புவது இது முதல் தடவை அல்ல. 
 
Pray  செய்பவர்கள் தப்பித்துக் கொள்வார்கள் என்றால் நியூயார்க் நகரை சாண்டி புயல் தாக்கிய போது அவரவர் தங்கள் இடத்திலிருந்து பிரார்த்தனை செய்திருந்தால் தப்பித்திருக்கலாமே.

 படித்தவர்களும் இந்த வதந்திகளை நம்ப முற்படுவது வேதனையைத் தருகிறது. நமது உலகம், சூரிய மண்டலம், அண்டம், பிரப்ஞ்சம் ஆகியவை ஓர் ஒழுங்கு உட்பட்டவை. விபரீத மாறுதல்களுக்கு இடமே இல்லை.
 வீண் வதந்திகளை நம்பாதீர்கள். எனது இந்தச் செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்

ராமதுரை

இப்போது கூடுதல் விளக்கம்:

சந்திரனை விடப் பலப் பல மடங்கு பெரியதான ஒன்று ( பெரிய கிரகம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்)  சூரியனுக்கும் பூமிக்கும் குறுக்கே வந்து நிற்குமானால் பூமிக்கு சூரிய ஒளியே கிடைக்காமல் பூமி முற்றிலும் இருளில் மூழ்கலாம்.

அப்படி பிரும்மாண்டமான ஒன்று குறுக்கே நிற்பதானால் அது  விண்வெளியில் எங்கிருந்தாவது வந்தாக வேண்டும். பூமியை நோக்கி அப்படி எதுவும் வருவதாக இதுவரை கண்டறியப்படவில்லை. அப்படி ஒன்று வருவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் இத்தனை நேரம் விஞ்ஞானிகள் அதைக் கண்டுபிடித்திருப்பார்கள்.

அப்படி ஒன்று வருவதாக வைத்துக் கொண்டால் ,  காரை பிரேக் போட்டு நிறுத்துவது போல அது திடீர் என்று பிரேக் போட்டு நிற்க வாய்ப்பே இல்லை. பூமி அல்லது சந்திரன் பிரேக் போட்டு நிற்காது. ஆகவே எதுவும் சூரியனுக்கும் பூமிக்கும் குறுக்கே வந்து மூன்று நாள் முகாம் போட முடியாது.

சரி, அது பிரேக் போட்டு நிற்பதாகவே வைத்துக் கொள்வோம். மறுபடி அதை எந்த சக்தி அங்கிருந்து கிளப்பும்? மூன்று நாட்கள் கழித்து அது தானாக எப்படி கிளம்பும்?  இது நியூட்டன் வகுத்த விதிகளை மீறுவதாக இருக்கும்.

ஒரு வேளை பூமியை விட பிரும்மாண்டமான ஒன்று சூரியனுக்கும் பூமிக்கும் குறுக்கே வந்து நின்று பூமிக்கு சூரிய ஒளி கிடைக்காமல் தடுக்கும் என்றால் அது சில நிமிஷ நேரமே ( சூரிய கிரகணத்தின் போது நிகழ்வது போல்)  அவ்விதம் தடுக்க முடியும்.

ஏனெனில் அதுவும் பூமியைப் போல சூரியனை சுற்றியாக வேண்டும். அப்படியானால் சூரியனைச் சுற்றி வருவதில்  அதன் வேகமும் பூமியின் வேகமும் வித்தியாசப்படும். அந்த பிரும்மாண்டமான ஒன்றினால் தொடர்ந்து மூன்று நாட்கள் அல்லது பல நாட்கள் பூமிக்கு சூரிய ஒளி கிடைக்காமல் தடுக்க முடியாது. அப்படி நிகழ்வதானால் அது கெப்ளர் வகுத்த விதிகளை மீறிவதாக இருக்கும்.

ஆக்வே வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். டிசம்பர் 23, 24 , 25 தேதிகள் வழக்கம் போலத் தான் இருக்கும்.
(ப்டங்கள் இல்லை, மன்னிக்கவும்)



31 comments:

  1. கூடுதல் விளக்கம் அறிந்து கொண்டேன்...

    வதந்தி தீ தானே...

    ReplyDelete
  2. மேலும் உதாரணத்தோடு உங்கள் நடையில் விளக்கியதற்கு மிகவும் நன்றி

    சுதாகர்

    ReplyDelete
  3. அதான் டிசம்பர் 21 - ஆம் தேதியே பூமி கூண்டோடு அழிந்துவிடப் போகிறதாமே (2012 என்று படம் கூட வந்ததே), அப்பிறம் 23- ஆம் தேதி பற்றி எதற்குக் கவலை?!

    சரவணன்

    ReplyDelete
  4. http://www.youtube.com/user/tbar1984?feature=results_main

    ReplyDelete
  5. அருமையான விளக்கம்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  6. சரியான நேரத்தில் வழங்கப்பட்ட சரியான விளக்கம். பாராட்டுக்கள் அய்யா.

    ReplyDelete
  7. வணக்கம் அய்யா. விளக்கம் மிகச்சரியானதே.வீண் வதந்திகளை நம்புவது, அதை அசைபோடுவது, அதை நினைத்து தன் நிம்மதி மட்டுமல்லாது பிறரையும் நிம்மதி இழக்கச்செய்வதையே தொழிலாகக் கொண்டு ஒரு கும்பல் வேலை செய்கிறதோ என்ற சந்தேகம்தான் வருகிறது.

    ReplyDelete
  8. ABUBAKKAR K M
    தாங்கள் மிகச் சரியாக்ச் சொல்லி விட்டீர்கள். இப்படி ஒரு கும்பல் வேலை செய்வதாகவே தோன்றுகிறது. அனேகமாக இது மேலை நாடுகளில் செயல்படுவதாகவே இருக்க வேண்டும்.
    மக்களிடையே வீண் பீதி கிளம்ப்புவது என்பது சமூகத்துக்கு எதிரான குற்றச் செயலே என்றும் சொல்லலாம்.

    ReplyDelete
  9. திரு என்.ராமதுரை அவர்களுக்கு வணக்கம்.
    தங்கள் கருத்து எனது கருத்துக்கும் , பதிவரின் கருத்துக்கும் மிகவும் வலுவூட்டுவதாக உள்ளது. மிக்க நன்றி.
    >> கோ.மீ.அபுபக்கர்,
    கல்லிடைக்குறிச்சி

    ReplyDelete
  10. ந்லல விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நியுட்டனின் இயக்க விதியையும் கொஞசம் விளக்கி இருக்கலாம் என்பது அடியேனின் தாழ்மையான வின்னப்பம்.

    ReplyDelete
  11. nasa research centre solliyathu unmaithan bumi sutramal irukum negal solliyathu pol bumiyin oru paguthi irulilum innoru paguthi velichamagavum irukum 1day mattum.

    ReplyDelete
  12. Anonymous
    நாஸா ஆராய்ச்சி நிலையம் சொல்வது உண்மைதான் என்று நீங்கள் கூறுகிறீர்கள். நாஸா அப்படி எதுவும் கூறவில்லை. நாஸா கூறியதாகச் சொல்லி வீண் வதந்தி அவ்வப்போது கிளப்பி விடப்படுகிறது.அந்த வதந்தியை நீங்கள் நம்புவதானால் எனக்கு அது பற்றி எந்த ஆட்சேபணையும் இல்லை. யார் வேண்டுமானாலும் எந்த வதந்தியையும் தாராளமாக நம்பலாம். இதில் அவரவருக்குப் பூரண உரிமை உள்ளது.

    ReplyDelete
  13. நல்ல விளக்கம். நல்ல வேளை அந்த வதந்தியைக் கேள்விப்படும் முன்பே உங்கள் பதிவைப் படித்து விட்டேன். 1982, 99, 2000 என்று அவ்வப்போது பூமிக்குக் கெடு வைத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள், பூமியும் அது பாட்டுக்கு அலுங்காமல் சுற்றிக் கொண்டு தான் இருக்கிறது.

    ReplyDelete
  14. உங்கள் விளக்கத்துக்கு நன்றி ஐயா, இருந்தும் ஒரு சந்தேகம்,
    பூமியைப்போல சிலமடங்கு பெரிய கிரகமொன்று பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வந்து பூமி சுற்றும் திசையில் பூமியின் ஒழுக்கிட்கு சாமந்தரமாக சுற்றின்னல் இது சாத்தியமாகாதா?

    ReplyDelete
  15. உங்கள் விளக்கத்துக்கு நன்றி ஐயா, இருந்தும் ஒரு சந்தேகம்,
    பூமியைப்போல சிலமடங்கு பெரிய கிரகமொன்று பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வந்து பூமி சுற்றும் திசையில் பூமியின் ஒழுக்கிட்கு சாமந்தரமாக சுற்றின்னல் இது சாத்தியமாகாதா?

    ReplyDelete
  16. hmmmm....nalle vilakkam

    ReplyDelete
  17. hmmmm...actly nan kode kolapattil irunthen bt nw teliva iruken...tq 4ur explntn..

    ReplyDelete
  18. அன்புச்செல்வன்
    அது நியாயமான கேள்வி தான். ஆனால் சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே அமைகின்ற ஒரு கிரகம் பூமி வேகத்தில் சுற்ற முடியாது. சூரியனை புதன் கிரகம் (தனது சுற்றுப்பாதையில்) ஒரு வினாடிக்கு 47 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றுகிறது.சூரியனுக்கு அருகில் இருப்பதால் புதன் அவ்வளவு வேகத்தில் சுற்றுகிறது.சூரியனிலிருந்து தள்ளி அமைந்துள்ள பூமியானது தனது சுற்றுப்பாதையில் வினாடிக்கு 29 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே அமைகின்ற -- நீங்கள் கூறும் -- கிரகம் சூரியனை பூமியின் வேகத்தை விட அதிக வேகத்தில் தான் சுற்றும். ஒரு கிரகம் சூரியனிலிருந்து எந்த அளவுக்கு தொலைவில் உள்ளதோ அந்த அளவுக்கு அது குறைந்த வேகத்தில் செல்லும். இதையே மாற்றிச் சொல்வதானால் எந்த அளவுக்கு சூரியனுக்கு அருகில் இருக்கிறதோ அந்த அளவுக்கு வேகமாகச் செல்லும். இது விஞ்ஞானி கெப்ளர் கண்டுபிடித்துக் கூறிய இயற்கை விதி.
    ஆகவே சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே அமைகின்ற கிரகம் பூமியை விட வேகமாக் சூரியனை சுற்றும். ஆகவே அதனால் தொடர்ந்து சூரியனை மறைத்தப்டி செல்ல இயலாது. தெளிவாகப் புரிந்திருக்கும் என்று கருதுகிறேன்.

    ReplyDelete
  19. பூமியை நோக்கி நிபுரூ என்று ஒரு இருண்ட கிரகம் வருவதை தங்கள் அறியவில்லையா அண்ணா

    ReplyDelete
  20. I also herd about planet X ( niburu). The scientists found it before 29 years. And they also found that niburu moving towards earth in a constant speed. Earlier they said that niburu will hit the earth on 21.12.2012 if it travel in the same speed that it travels now. If it so we could see it inAugust. I knew upto this. I couldn't find more. Sir, I have a question to you.. Do u believe Mayans calendar. What s ur opinion about it?

    ReplyDelete
  21. Anonymous
    மாயன் காலண்ட்ர், உலகம் அழியும் என்பதெல்லாம் சுத்த ஹம்பக். அமெரிக்காவில் உள்ள பாமர மக்களுக்கு மர்மம், திகில்,திடுக் என்பதெல்லாம் பிடிக்கும். உலகம் ஒரு நாள் அழியும் என்று அவர்க்ளின் அடிமனதில் ஒரு நம்பிக்கை உண்டு. இதை வைத்து நிறைய எழுத்தாளர்கள் பணம் பண்ணி வருகின்றனர்.
    இதற்கு முன்னர் இந்தியாவில் இப்படியான் முட்டாள்தனமான நம்பிக்கைகள் கிடையாது. இண்டர்னெட் வந்ததற்குப் பிறகு இந்தியாவிலும் ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. மர்மம் திகில் என்றால் சுவாரசியமானது ஆகவே பலரும் இதைப் படிக்கின்றனர். ஒரு சிலர் நம்பவும் செய்கின்றனர்.
    பூமியை நோக்கி வருகின்ற ஆனால் பூமியைத் தாக்காமல் கடந்து செல்கின்ற அஸ்டிராய்டுகளை விஞ்ஞானிகள் பல்வேறு வகைகளில் ஆராய்ந்து அவை எப்போது வரும் பூமியை எவ்வளவு தொலைவில் கடந்து செல்லும் என்பதையெல்லாம் முன் கூட்டி கணக்கிட்டு வைத்துள்ளனர்
    இதன்படி வெறும் 15 மீட்டர் குறுக்களவு கொண்ட பறக்கும் பாறை ஒன்று வருகின்ற டிசம்பர் 11 ஆம் தேதி பூமியை 30 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்ல இருக்கிறது.இப்படி பூமியைக் கடந்து செல்கின்ற அஸ்டிராய்டுகளின் பட்டியல் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது.
    ஆனால் பூமியைப் போல நான்கு மடங்கு பெரியதாக இருக்கும் என்று சொல்லப்படுகின்ற நிபுரு மட்டும் எந்தக் கருவியிலும் ராடாரிலும் சிக்காமல் அடுத்தமாதம் வந்து சேரப்போகிறது என்றால் அது வெறும் பூச்சாண்டியாகத் தான் இருக்க முடியும்.
    தயவு செய்து நிபுரு சமாச்சாரம் பக்கம் செல்லாதீர்கள் அது நேரத்தை வீணடிக்கிற செயலாகவே இருக்கும்.

    ReplyDelete
  22. Very good explanation thank you sir.

    ReplyDelete
  23. ஆனால் ஐயா,தற்சமயம் கமராவில் sun a photo எடுக்க பக்கத்தில் உள்ள கல் பற்றி..........

    ReplyDelete
  24. Anonymous
    தாங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்பது புரியவில்லை. கேமராவில் என்கிறீர்கள், பக்கத்தில் உள்ள கல் என்கிறீர்கள். தெளிவாகக் கூறினால் தங்கள் சந்தேகத்தைப் புரிந்து கொள்ள இயலும்.

    ReplyDelete
  25. வணக்கம்!

    என்னைப் பொறுத்தவரை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி
    தற்கொலைவரை செய்யக்கூடிய அளவிற்கு தூண்டும்
    நபர்களை கருடபுராண வழி உறைகளில் சித்திரவதை செய்து மரணதண்டனை அளிப்பதே மேல்.

    ReplyDelete
  26. இலங்கையில் பல இடங்களில் கிறிஸ்தவ அமைப்புக்கள் இதை வைத்துக்கொண்டு மதம் மாற்றி வருகின்றனர். இதற்கு பல இந்து அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்தும் நிறுத்தவில்லை. தொடர்ந்து கொண்டே இருக்கின்றது...

    ReplyDelete
  27. நல்ல விளக்கங்கள்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  28. ஒளியின் வேகம் போன்று இருளுக்கு வேகம் உண்டா? அது (இருள்) ஒளியை விட வேகமானதா?

    ReplyDelete