Pages

Oct 13, 2012

வருகுது, ராட்சத வால் நட்சத்திரம்


1680 ஆம் ஆண்டில் தோன்றி மக்களைப் பயமுறுத்திய வால் நட்சத்திரம். இது ஓர் ஓவியம்
அடுத்த ஆண்டு  டிசம்பர் மாதக் கடைசி வாக்கில் வானில் ராட்சத வால் நட்சத்திரம் தெரியப் போவதாக வானவியல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.இருட்டிய பின்னர் மேற்கு வானில் இந்த வால் நட்சத்திரம் iமிகுந்த பிரகாசத்துடன் தெரியும் என்கிறார்கள். இதன் ஒளி பௌர்ணமி நிலவை விட 10 மடங்கு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இது பகலிலும் மங்கலாகத் தெரியும் என்று கூறப்படுகிறது.

இந்த வால நட்சத்திரம் இப்போது மிகத் தொலைவில் வியாழன் கிரகத்துக்கு அப்பால் உள்ள்து. .ரஷியாவைச் சேர்ந்த விட்டாலி நெவிஸ்கி, ஆர்ட்யோம் நோவிசோனோக்  ஆகிய இருவரும்  செப்டம்பர் மாதம் இதை சக்திமிக்க தொலைனோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
அடுத்த ஆண்டில் வரப்போகும் ISON  வால் நட்சத்திரம் .சிறிய கோடுகள் அதை சிறிய ஒளிப்புள்ளியகக் குறிப்பிடுகின்றன. தொலைனோக்கி மூலம் எடுத்த ப்டம்
பொதுவில் வால் நட்சத்திரங்கள் சூரிய மண்டல எல்லைக்கு அப்பால் ஊர்ட் முகில் எனப்படும் பகுதியிலிருந்து வருகின்றன. இவை கிரகங்களைப் போலவே சூரிய குடும்பத்தைச் சேர்ந்தவை. கிரகங்கள் சூரியனை வட்ட வடிவப் பாதையில் சுற்றுகின்றன. வால் நட்சத்திரங்கள் நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்றன.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வால் நட்சத்திரத்துக்கு C/2012 S 1  என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு ISON என்ற பெயரும் உண்டு. மற்ற வால் நட்சத்திரங்களைப் போலவே இது சூரியனை சுற்றி விட்டு வந்த வழியே சென்று விடும்.

இது மிகுந்த பிரகாசத்துடன் தெரியலாம் என்று சொல்வதற்குக் காரணங்கள் உண்டு. இது  அடுத்த ஆண்டு நவம்பர் வாக்கில் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும் போது அதற்கும் சூரியனுக்கும் மிகக் குறைவான தூரமே -- 11 லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரமே இருக்கும். இதன் காரணமாக ஐஸ் துணுக்குகள், தூசு, வாயு துணுக்குகள் வடிவில் நிறையப் பொருட்களை அது  இழக்கும். ஆகவே அது பெரிய நீண்ட வாலைப் பெற்றதாக இருக்கும். ஒப்பு நோக்குகையில் இது பூமிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் .

அடிப்படையில் பார்த்தால் வால் நட்சத்திரம் என்பது நட்சத்திரமே அல்ல. அதற்கு சுய ஒளி கிடையாது. அதே போல அதற்கு நிரந்தர  வால் கிடையாது. சூரியனை நெருங்கும் போது வால் நட்சத்திரத்திலிருந்து வெளியே தள்ளப்படும் தூசு, வாயுக்கள் ஆகியவை நீண்ட வால் போல அமையும். அவற்றின் மீது சூரிய ஒளி படும் போது அது வால் போல் தோற்றம் அளிக்கும்.

வால் நடசத்திரத்தின் தலைப் பகுதி பொதுவில் பாறைகள், கற்கள், உறைந்த வாயுக்கள், உறைந்த பனிக்கட்டி, தூசு முதலியவற்றால் ஆனது. இதன் குறுக்களவு 20 கிலோ மீட்டர் இருக்கலாம். அபூர்வமாக 300 கிலோ மீட்டராக இருப்பதும் உண்டு.

விண்வெளியில் மிகத் தொலைவில் இருக்கும் போது வால் நட்சத்திரம் ஒழுங்கற்ற உருண்டையாகத் தான் இருக்கும். சூரியனை நெருங்க நெருங்க சூரியனின் வெப்பம் காரணமாகவும் சூரியனிலிருந்து வெளிப்படும ஆற்றல் மிக்க துகள்கள் காரணமாகவும் வால் நட்சத்திரத்திலிருந்து மேலே கூறிய வகையில் நுண்ணிய பொருட்கள் வெளிப்பட்டு வால் தோன்றும்.

 அதே நேரத்தில் வால் நட்சத்திரத்தின் தலை பெருத்து சிகை (Coma) தோன்றும். அதாவது அதன் தலையைச் சுற்றி புகை மண்டலம் தோன்றும் அப்போது.அது 80 ஆயிரம் கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டதாக இருக்கலாம். வால் நீளம் 10 லட்சம் கிலோ மீட்டராக இருக்கலாம்.
வால் நட்சத்திரத்தின் இரட்டை வால்கள்
வால் நட்சத்திரத்துக்கு இருவித வாலகள் இருக்கும். ஒன்று தூசு முதலியவற்றால் தோன்றும் வால். இன்னொன்று அயனிகளால் ஏற்படும் வால். சில சமயங்களில் இந்த இரண்டு வால்களும் தனித்த்னியே தென்படும்.

வால் நட்சத்திரத்தின் வால் விஷய்த்தில் ஒரு விசித்திர அம்சம் உண்டு. சூரியனை  நோக்கி வரும் போது வால் நட்சத்திரன் தலை முன்னே இருக்க வால் பின்னே இருக்கும். சூரியனை சுற்றி முடித்த பின்னர் வால் முன்னே செல்ல தலை பின் தொடர்ந்து செல்லும்.

வால் விஷய்த்தில் இப்படி ஏற்படுவதற்குக் காரணம் உண்டு. சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க துகள்கள் த்ள்ளுவதால் தான் வால் ஏற்படுவதாகச் சொன்னோம். அந்த அளவில் சூரிய்னின் துகள்கள் வாலை முன்னே தள்ளி விடுவதால் வால் முன்னே செல்ல தலை பின் தொடர்கிறது.
சூரினை நோக்கி வருகையில் வால் பின்புறமும் பின்னர் வால் எதிர்ப்புறமும் அமைந்துள்ளதைக் கவனிக்கவும் 
வால் நட்சத்திரம் தெரிந்தால் தீமை ஏற்படும் என்பதெல்லாம் மூட நம்பிக்கை. ஒரு சமயம் பூமியானது ஹாலி வால் நட்சத்திரத்தின் நீண்ட வால் வழியே சென்ற்து. இதனால் பூமிக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டு விடவில்லை.

இதற்கு முன்னர் 1680 ஆம் ஆண்டில் நீளமான வால் கொண்ட பெரிய வால் நட்சத்திரம் தோன்றியது. அப்போதெல்லாம் வால் நட்சத்திரம் குறித்து நிறைய மூட நம்பிக்கைகள் நிலவின. செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கோராதவர்களை தண்டிக்க தேவன் வால் நட்சத்திரத்தை அனுப்பியிருக்கிறான் என்று மக்கள் நம்பி வால் நட்சத்திரத்தைக் கண்டு பீதியில் ஆழ்ந்தனர்

எந்த ஒரு வால நட்சத்திரமும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தலை காட்டும். 1680 ஆண்டு வால் நட்சத்திரத்தின் பாதையை நிபுணர்கள் கணக்கிட்ட போது அது 575 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைகாட்டலாம் என்று கருதப்பட்டது.

அடுத்த ஆண்டு தலைகாட்ட இருக்கும் வால் நட்சத்திரம் பற்றி வால நட்சத்திர நிபுணர் ஹான் போர்ட்டில் கூறுகையில் ஒரு வேளை இது 1680  ஆம் ஆண்டில் தலைகாட்டிய அதே வால் நட்சத்திரமாகவும் இருக்கலாம் என்றார்.
1910 ஆம் ஆண்டு தலைகாட்டிய  போது ஹாலி வால் நட்சத்திரம் 
வேறு சில நிபுணர்கள் அடுத்த ஆண்டு வால் நட்சத்திரம் பற்றிக் குறிப்பிடுகையில் அது பற்றிய பெரிய எதிர்பார்ப்பு  ஏமாற்றத்தில் போய் முடிவதற்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளனர். வானில் பெரிதாக எடுப்பாகத் தெரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட வால் நட்சத்திரங்கள் கடந்த காலத்தில் மிகச் சிறியதாக ஒளி மங்கியதாகத் தலைகாட்டிச் சென்றுள்ளன
1986 ஆம் ஆண்டில் ஹாலி வால் நட்சத்திரம் 
.ஹாலி வால் நட்சத்திரம் மிகப் பிரபலமானது. அது 1910 ஆம் ஆண்டில் தலைகாட்டிய போது பிரமிப்பூட்டுவதாக இருந்தது. ஆனால் அது மறுபடி 1986 ஆம் ஆண்டில் தலைகாட்டிய போது முந்தைய அளவுக்குப் பெரிதாக இல்லாமல் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.


ஓராண்டு  நிறைவு

கடந்த ஆண்டு செப்டம்பர் கடைசி வாக்கில்  நண்பர் திரு பத்ரி சேஷாத்ரி அவர்களை ஏதோ ஒரு வேலையாகச் சந்திக்கச் சென்றேன். அப்போது அவர் தான் ஒரு வலைப்பதிவைத் தொடங்குவது பற்றி எனக்கு ஐடியா கொடுத்து உடனேயே அதைத் தொடக்கியும் கொடுத்தார். இவ்விதமாகத் தான் இந்த வலைப்பதிவு தோன்றியது. முதல் பதிவு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரம் வெளியாகியது. நாட்கள் ஓட, இப்போது ஓராண்டு பூர்த்தியாகி விட்டது.

ஓராண்டு நிறைவு என்பது பெரிய சாதனை அல்ல. ஆனால் அது ஒரு மைல்கல். அந்த அளவில் அது முக்கியத்துவம் கொண்டதே. முற்றிலும் அறிவியல் தொடர்பான வலைப்பதிவாயிற்றே, எந்த அளவுக்கு ஆதரவு இருக்குமோ என ஆரம்பத்தில் எனக்கு சற்றே ஐயம் இருந்தது. ஆனால் முதல் இரு மாதங்களிலேயே  எனது அச்சம் நீங்கியது. உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் அன்பர்களின் அமோக ஆதரவு என்னை வியக்க வைத்தது
.
 எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கொடுத்தால் மக்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்ற எனது நம்பிக்கை உறுதியாகியது. தொடர்ந்து வாசக அன்பர்களின் ஆதரவைக் கோருகிறேன்.

ராமதுரை


15 comments:

  1. goodluck for your continuing efforts

    ReplyDelete
  2. Hi , your posts are amazing......very easy and simple......Good luck for one yr completion

    ReplyDelete
  3. Thank you very much for posting articles which are updated and easy to understand. Please keep on posting your essays.

    ReplyDelete
  4. sir...your art of explaining science to people like me are gr8 and can't be explained through words....pls, continue your service and i wish you all the best and good luck.

    ReplyDelete
  5. I am your regular reader. Please continue writing for us.

    ReplyDelete
  6. விரிவான தகவல்களுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  7. ஒரு வருட நிறைவை ஒட்டி வாழ்த்துகள். இன்னும் பல வருடங்கள் எழுதித் தமிழுக்கும் அறிவியலுக்கும் சேவை செய்ய இறைவன் உங்களுக்கு எல்லா நலன்களையும் தர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  8. வானில் அவ்வப்போது வால் நட்சத்திரங்கள் தோன்றியும் மறைந்தும் கொண்டிருக்கின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஹாலியின் வால் நட்சத்திரத்துக்கு மட்டும் அதிகப் பரபரப்பு இருந்ததாகவும் மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டதாகவும் எனக்குத் தோன்றுகிறது. அதன் காரணம் என்ன?

    ReplyDelete
  9. poornam\
    அடிக்கடி தலைகாட்டுகிற வால் நட்சத்திரங்கள் பல உண்டு. அவற்றில் வெறும் கண்ணால் நன்கு பார்க்க்க்கூடிய வால் நட்சத்திரம் ஹாலி வால் நட்சத்திரமே. பல வால் நட்சத்திரங்கள் அடிக்கடி தலைகாட்டும் என்ற கொள்கையைக் கூறியவ்ர் எட்மண்ட் ஹாலி என்னும் பிரிட்டிஷ் நிபுணர். அவர் கூறியபடியே குறிப்பிட்ட வால் நட்சத்திரம் 1758 ல் தலைகாட்டியது. அதற்கு ஹாலியின் பெயர் வைக்கப்பட்டது.அவர் கூறியபடி ஹாலி வால் நட்சத்திரம் தலைகாட்டிய போது அவர் இல்லை. ஒருவர் தனது வாழ் நாளில் ஹாலி வால் நட்சத்திரத்தை இரு தடவை காண இயலும். இப்படியான காரணங்களால் அது பிர்பல வால் நடசத்திர அந்தஸதைப் பெற்றுள்ளது

    ReplyDelete
  10. பதிவுலகில் இரண்டாம் ஆண்டு அடி எடுத்து வைக்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்களை போல் அறிவியலை தமிழில் எளிமையாக புரியும்படி எழுதுபவர்கள் குறைவு. தொடருங்கள்... நன்றி.

    ReplyDelete
  11. ராமதுரை
    வாழ்த்துத் தெரிவித்த அனைவ்ருக்குன் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தங்கள்து வார்தைகள் எனக்கு மேலும் ஊக்குதலை அளிப்பவையாக உள்ளன.

    ReplyDelete
  12. வணக்கம் ஐயா.

    இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தங்களின் வலைப்பூவிற்கும் அதை மிகவும் எளிய தமிழில் எங்களுக்குத் தரும் தங்களுக்கும் மேலும் தங்களை வலைப்பூ எழுத ஊக்குவித்த தங்கள் நண்பர் திரு.பத்ரி சேஷாத்ரி அவர்களுக்கும் எங்களின் மனம்நிறைந்த வாழ்த்துகள் ஐயா. என்னைப் பொறுத்தவரை வானம் என்பது நம் தலைக்கு மேலே இருப்பது அவ்வளவுதான் என்று எண்ணியிருந்தேன் தங்களின் பதிவுகளை படித்தபின் தான் அதன் அதிசயங்களையும் அற்புதங்களையும் அறிந்துகொள்ள முடிந்தது. தாங்கள் தொடர்ந்து எழுதவேண்டும் எங்களின் அறிவுபபசியை தீர்க்கவேண்டும் நன்றி ஐயா.

    வெங்கடேஷ்.

    ReplyDelete
  13. வால் நட்சத்திரம் இன்னொரு பெயர்

    ReplyDelete