டிவி ஸ்டுடியோவிலிருந்து இணை சுற்று செயற்கைக்கோளுக்கு சிக்னல் அனுப்பப்படுவதையும் பின்னர் சிக்னல்கள் கீழே திருப்பி அனுப்பப்படுவதையும் இப்படம் விளக்குகிறது. |
செயற்கைக்கோளிலிருந்து சிக்னல் பெற கிண்ண வடிவ ஆண்டெனா |
தட்டை வடிவ ஆண்டெனா |
நம்மைப் பொருத்த வரையில் அது “ நிலையாக “ இருக்கும்படி செய்ய முடியும்.
பூமியானது தனது அச்சில் ஒரு முறை சுற்றி முடிக்க மிகச் சரியாக 23 மணி 56 நிமிஷம், நான்கு வினாடி ஆகிறது. பூமியைச் சுற்றுகின்ற ஒரு செயற்கைக்கோள் பூமியை ஒரு தடவை சுற்றி முடிக்க மிகச் சரியாக இதே நேரத்தை எடுத்துக் கொண்டால் சென்னைக்கு மேலே வானில் குறிப்பிட்ட இடத்தில் தெரிகிற செயற்கைக்கோள் என்றும் சென்னைக்கு மேலே அதே இடத்தில் தெரிந்து கொண்டிருக்கும்.
செயற்கைக்கோள் இப்படி ஏன் ’நிலையாக’ இருக்க வேண்டும்? கீழே உள்ள டிவி நிலையம் அனுப்புகின்ற சிக்னல் நேர் கோட்டில் செல்லும். செயற்கைக்கோள் சிறிது நகர்ந்தாலும் சிக்னல் செயற்கைக்கோளை சென்றடையாது வேறு எங்கோ போய்க் கொண்டிருக்கும். இவ்விதமாக வானில் குறிப்பிட்ட தீர்க்க ரேகைக்கு மேலே ‘நிலையாக‘ இருக்கின்ற செயற்கைக்கோள்களுக்கு Geostationary Satellite என்று பெயர். இவை பூமிக்கு இணையாக பூமியைச் சுற்றுவதால் தமிழில் இவற்றை இணைசுற்று செயற்கைக்கோள்கள் என்று கூறலாம்.
இந்தியாவின் ஜிசாட் 12 இணைசுற்று செயற்கைக்கோள் |
இந்த உயரத்தில் அமைந்தபடி ஒரு செயற்கைக்கோள் பூமியை வட்ட வடிவப் பாதையில் சுற்றும்படி செய்யும்போது அது எந்த வேகத்தில் சுற்றுகிறது என்பது பற்றி நமக்குக் கவலையில்லை. அது எடுத்துக் கொள்கின்ற நேரம் தான் முக்கியம். ஆகவே அந்த செயற்கைக்கோள் அதே உயரத்தில் இருக்கும்படி பார்த்துக் கொண்டால் போதும். இதற்குப் பல வழிகள் உள்ளன.
உயரே செல்லக் காத்திருக்கும் ஜிசாட்- 10 செயற்கைக்கோள் |
இந்தியா இப்படி எடை மிக்க செயற்கைக்கோள்களை அடிக்கடி செலுத்த வேண்டியுள்ளது ஏன் என்று கேட்கலாம். இந்தியா ஒரு பெரிய நாடு. மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு. டிவி ஒளிபரப்பு, தகவல் தொடர்பு, வானிலைத் தகவல் சேகரிப்பு என பல பணிகளுக்கும் நாம் செயற்கைக்கோள்களை நம்பி இருக்கிறோம். உள்ளபடி தமிழில் மட்டும் பல டிவி சேனல்கள் உள்ளன. இந்தியாவின் பிற மொழிகளையும் கணக்கில் கொண்டால் பல நூறு டிவி சேனல்கள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. எல்லாமே இணைசுற்று செயற்கைக்கோள்களை நம்பி நிற்பவை.
பல்வேறு நிறுவனங்களின் அன்றாடப் பணிகள் இணைசுற்று செயற்கைக்கோள்கள் மூலமே நடைபெறுகின்றன. நாட்டின் பங்கு மார்க்கெட் வர்த்தகம் செயற்கைக்கோள் மூலமாகவே நடைபெறுகிறது. மணியார்டர் அனுப்புவது கூட செயற்கைக்கோள் மூலம் நடக்கிறது. இப்படியாக இவ்வித செயற்கைக்கோள்கள் பல பணிகளைச் செய்து வருகின்றன. ரயில் பயணத்தின் போது இண்டெர்னட் இணைப்பு பெறவும் இணைசுற்று செயற்கைகோள் மூலம் ஏற்பாடு செய்யத் திட்டம் உள்ளது. செயற்கைக்கோள்கள் இல்லை என்றால் நாடே ஸ்தம்பித்து விடும் என்ற நிலை உள்ளது.
இப்போது நம் தலைக்கு மேலே இந்தியாவை நோக்கியபடி 13 இணை சுற்று செயற்கைக்கோள்கள் உள்ளன. இவை அனைத்தும் பூமியின் நடுக்கோட்டுக்கு (Equator) நேர் மேலே உள்ளன. அதே சமயத்தில்அவை வெவ்வேறான தீர்க்க ரேகைக்கு மேலே உள்ளன. அவை வருமாறு:-
. ஜிசாட்- 2 செயற்கைக்கோள்-- 48 கிழக்கு தீர்க்க ரேகை
இன்சாட் 3E, ஜிசாட் 8 --- 55 கிழக்குத் தீர்க்க ரேகை
இன்சாட் 3C இன்சாட் -- 4CR, கல்பனா, எடுசாட்-- 74 கிழக்குத் தீர்க்க ரேகை
இன்சாட் 2E, இன்சாட் 3B, இன்சாட் 4A, ஜிசாட் 12 -- 83 கிழக்குத் தீர்க்க ரேகை
இன்சாட் 4B, இன்சாட் 3A -- 93 கிழக்குத் தீர்க்க ரேகை
இவற்றில் கல்பனா செயற்கைக்கோள் வானிலை தகவல்களை அளிப்பதற்கானது. எடுசாட் செயற்கைக்கோள் கல்வி ஒளிபரப்புக்கானது. மற்ற 11 செயற்கைக்கோள்களும் தக்வல் தொடர்பு உட்பட மேலே குறிப்பிட்ட பணிகளுக்கானவை. இவை போதாது. இந்தியாவுக்கு இவை போன்று மேலும் பல இணை சுற்று செயற்கைக்கோள்கள் தேவைப்படுகின்றன.
இந்தியாவுக்கு மேலே 35,786 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள 13 இணைசுற்று செயற்கைக்கோள்களைக் காட்டும் வரைபடம் |
உதாரணமாக் இந்தியாவின் ஜிசாட்-10 செயறகைக்கோளை இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே உயரே செலுத்தியிருக்க வேண்டும். அது தாமதப்பட்டதால் இந்தியாவில் டிஷ் மூலம் டிவி நிகழ்ச்சிகளை அளிக்கும் ஓர் இந்திய நிறுவனம தனது சேவையை மேற்கொண்டு விஸ்தரிக்க முடியாமல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது
இந்தியா போலவே உலகில் பல நாடுகள் சொந்தமாக இணைசுற்று செயற்கைக்கோள்களைப் பெற்றுள்ளன. ஆனால் பல சிறிய நாடுகளின் தேவைக்காக இண்டல்சாட் என்னும் சர்வதேச நிறுவனம் உயரே இணைசுற்று செயற்கைக்கோள்களைச் செலுத்தியுள்ளது. இவற்றைப் பயன்படுத்தும் சிறிய நாடுகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அட்லாண்டிக் கடலுக்கு மேலே உள்ள செயற்கைக்கோள்களைக் காட்டும் படம். வளைவு கோட்டுக்கு கீழே உள்ள எண்கள் கிழக்கு அல்லது மேற்கு தீர்க்க ரேகையைக் குறிப்பவை. |
நாம் இப்பதிவில் முக்கியமாக இணைசுற்று செயற்கைக்கோள்கள் பற்றியே கவனித்தோம். பூமியை வடக்கு தெற்காகச் சுற்றும் செயற்கைக்கோள்கள் நிறையவே உள்ளன. இவை வட தென் துருவங்களுக்கு மேலாக அமைந்துள்ளதால் துருவ செயற்கைக்கோள்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன. இந்தியாவின் இணைசுற்று செயற்கைக்கோள்களைச் சேர்க்காமல் இந்தியாவின் 11 துருவ செயற்கைக்கோள்கள் வடக்கு தெற்காக பூமியை சுற்றி வருகின்றன். இவை பிரதானமாகப் படம் எடுக்கும் செயற்கைக்கோள்களாகும். சுமார் 600 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கின்ற இந்த செயற்கைக்கோள்களின் எடை குறைவு என்பதால் இவை இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்படுகின்றன.
துருவ செயற்கைக்கோள் பூமியை வடக்கு தெற்காகச் சுற்றுவதைக் காட்டும் படம். |
பிற நாடுகளின் தேவைக்கேற்ப நம்மால் செயற்கைக்கோள்களை தயாரித்து அளிக்க இயலும். பல்வேறு வகையான செயற்கைக்கோள்களைத் தயாரிப்பதில் நமக்கு நிறைய அனுபவம் உள்ளது. அவற்றைச் செலுத்தித் தருவதிலும் நாம் ஈடுபட்டால் இத்துறையில் நாம் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ முடியும். நாமாக உருவாக்கியுள்ள கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் வெற்றி பெறுவதைப் பொருத்து தான் எல்லாமே உள்ளது.