சூரிய மின் பலகைகள். ஆழ்ந்த நீல நிறத்தில் உள்ளதைக் கவனிக்கவும் |
தமிழகத்தில் விவரம் தெரிந்தவர்கள் யாரும் கோடைக் காலத்தில் கருப்பு நிற சட்டை அல்லது கருப்பு நிற பேண்ட் அணிய மாட்டார்கள். அப்படி அணிந்து வெயிலில் சென்றால் உடல் தகிக்கும். வெயிலை, அதாவது வெப்பத்தை, கிரகிப்பதில் கருப்பு நிறம் முதலிடம் வகிப்பதாகச் சொல்லலாம். ஆகவே தான் தமிழகத்தில் கிராமப்புறங்களில் அந்த நாட்களில் பாரம்பரிய உடையாக வெள்ளைச் சட்டையும் வெள்ளை வேட்டியும் அணிந்து வந்தனர்.
இப்போது சூரிய மின் பலகைகளுக்கு வருவோம். இப்பலகைகள் மீது சூரிய ஒளி படும் போது ஒளியானது மின்சாரமாக மாற்றப்படுகிறது. சூரிய ஒளி என்பது போட்டான்களே (Photons). இந்த போட்டான்களைத் தான் சூரிய மின் பலகைகள் கிரகிக்கின்றன. போட்டான்கள் அதிக அளவில் ஈர்க்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இதுவரை ஆழ்ந்த நிறத்தை -- நீல நிறத்தை-- பயன்படுத்தி வந்தார்கள்.
நாட்கோர் நிறுவன டெக்னீஷியன் கருப்பு நிற சிலிக்கன் வில்லையைக் காட்டுகிறார் |
வழக்கமான சூரிய மின் பலகைகள் சூரிய ஒளியில் அடங்கிய போட்டான்களில் 96 சதவிகிதத்தையே கிரகிப்பதாகக் கூறப்படுகிறது. இத்துடன் ஒப்பிட்டால் கருப்பு நிற சோலார் செல்கள் 99.7 சதவிகித அளவுக்கு போட்டான்களைக் கிரகிப்பதாகத் தெரிய வந்துள்ளது. இந்த வித்தியாசம் வெறும் மூன்று சதவிகிதமே என்றாலும் கருப்பு சோலார் செல்களைப் பயனபடுத்தும் போது கூடுதம் மின்சாரம் கிடைக்கும் என்பது சுட்டிக் காட்டப்படுகிறது.
சோலார் செல்களைத் தயாரிப்பது என்பது மிகுந்த சிக்கல் பிடித்த விஷயம். மிக மிகத் தூய்மையான அளவுக்கு சிலிக்கன் மென் படலங்களைத் தயாரித்து அவற்றைக் கொண்டு தான் சோலார் செல்கள் தயாரிக்கப்படுகின்றன. கரிய நிற சிலிக்கன் மூலம் படலங்களைத் தயாரித்து அவற்றைக் கொண்டு கருப்பு நிற சோலார் செல்களைத் தயாரிப்பது என்பது அதை விடவும் சிக்கலான விஷயம். கருப்பு நிற சோலார் செல்களை உருவாக்குவது குறித்து கடந்த சில காலமாக ஆராய்ச்சி நடந்து வந்தது.
இப்போது மேற்படி அமெரிக்க நிறுவனம் மணிக்கு 2000 கருப்பு நிற சோலார் படலங்களைத் தயாரிப்பதற்கான யந்திரத்தை வடிவமைப்பதற்காக் உற்பத்தியாளர்களுடன் தொடர்பு கொண்டுள்ளது
சிலிக்கன் மென் படலங்களைக் கொண்டு சோலார் செல்கள் உருவாக்கப்படுகின்றன. இப்படியான சோலார் செல்களை ஒன்றோடு ஒன்று இணைப்பதன் மூலம் சூரிய மின் பலகைகள் தயாரிக்கப்படுகின்றன.
கருப்பு நிற சோலார் மின் பலகைகள் குறித்து இத்தாலி, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ivunga arvatha kaati velaya aarambikkarathukulla namakku vayasayidum!
ReplyDeleteஐயா, கருப்பு நிற சோலார் தகடுகள் தயாரிப்பதில் ஏன் அவ்வளவு சிக்கல் வருகிறது? கருப்பு நிறம் ஒளியை மட்டுமல்லாது, வெப்பத்தையும் கிரகிக்குமே, அது வேறு பிரச்சனைகளை உருவாக்குமா என்று தெரியவில்லை. நன்றி!
ReplyDeleteபுதிய முயற்சியாக இருக்கின்றது. கருப்பு நிறம் வெப்பத்தை நன்கு கிரகிக்கும் என்பதை கருப்பு மற்றும் வெள்ளை கிராநைட் கற்களின் உபயோகத்தில் நன்கு உணர்ந்தேன்.மனிதனுக்கு நிர்பந்தம் என்று ஏற்படும்பொது அதற்கான வழிகளை கண்டுபிப்பான் என்பது நிரூபணம்.ஆறு மாத நெல்லை ஒரு மாதத்தில் விளைவித்த மனிதன் காலையில் நெல்லைப் போட்டு மாலையில் நெல்லை அறுக்கும் காலம் வந்தால் ஆச்சர்யம் இல்லை.நாற்பது நாளில் மூன்று கிலோ கோழி பணம் இருந்தால் ஒரு கோடி முட்டைகூட இந்த நிமிடத்தில் வாங்க முடியும் என்ற நிலை .அதுபோல இன்றைய நிர்பந்தம் மின்சாரம்.எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற இத்தகைய ஆய்வுகள் நிச்சயம் மனிதனின் பித்தத்தை தெளிய வைக்கும்.அதாவது மின்சார தேவையை பூர்த்தியாக்கும்.
ReplyDeleteவழக்கம் போல் ஓர் நல்ல பதிவு நன்றி ஐயா,விரைவில் தீர இருக்கும் மற்றும் காற்றில் மாசை ஏற்படுத்தும் நிலக்கரி,கச்சா என்னை,உரேனியம்,கொண்டு எத்தனை நாளைக்கு மின்சாரம் தயாரிக்க முடியம் எதிர் காலத்தில் சூரிய மின்சாரம் தான் ஒரே வழி.மின்னல் மூலமும் மின்சாரம் கிடைக்கிறது ஆனால் அதை சேமித்து வைக்க கூடிய தொழில் நுட்பம் இன்று நம்மிடம் கிடையாது எதிர் காலத்தில் அதுவும் சாத்தியமாகலாம்.
ReplyDeleteஒரு மின்னலை மனிதனால் சேமிக்க முடியும் என்றால் முழு உலகத்திற்கும் இரண்டு நாள் மின்சாரத்தை வழங்க முடியும் என்று படித்துள்ளேன்.ஐயா இதைப்பற்றி எதும் தகவல் இருந்தால் பதியவும்.
ReplyDeleteI was wondering why people were using umbrellas in black colour!
ReplyDeleteOfcourse, now a days, umbrellas are available in various colours.
I was under the impression, BLACK colour gives more comfort during summer!
நான் போபாலில் இருந்த பொது (1990 - 94 ), வீட்டு உபயோகத்திற்காக சோலார் குக்கர் வாங்கினேன். விலை 800 ரூபாய் மான்யம் 400 ரூபாய். மிகவும் உபயோகமாக இருந்தது. மே - ஜூலை மாதங்களில் (வெயில் அதிகமாய் இருக்கும் பொது), அரிசி, பருப்பு வகைகள் , காய்கறிகள் , 25 நிமிடங்களில் வெந்து விடும். அந்தக் குக்கரில், அடிப்பாகமும், அலுமினியப் பாத்திரங்களும் கருப்பு கலரில்தான் இருந்தன.
ReplyDeleteதொடர்ந்து உபயோகத்தினால், அந்த கருப்பு நிறம் மறைந்து விட்டது . ஆனால், கடைகளில் கிடைக்கும் கருப்பு பெயின்டை வாங்கி, அதன் மீது அடித்து மீண்டும் பயன் படுத்தினோம்.
கருப்பு வண்ணம் அதிகமாக வெயிலினை உள் வாங்கும் என்பது எனது அனுபவம்.
vanakkam iiyya,Nalla seithi soonnirkal. iyya enakkul orru vvina thhoonrukirathu,namatu arasangam anu ulaikkagaum veli state i irunthu minsaram vanga selavalikkum panaththil free aka village makkalukku intha solar system koduthu paramarikalamae? ithi poontra karuthukkal palarukkum earpatirukalam anal ean ithai arasangam seyal paduthamal irukkirathu?nandro iyya.
ReplyDeleteNalla thagaval iyya, enakku oru santhegam... namathu nadu anu ulaiggakaum.. arukamaiil ulla manilathil irunthu minsaram peruvatharkum naam athika panathai payanpatuthukirom. Antha panathai kondu ean kirama makkalukku intha solar systathai free aka koduthu minsarathai peralamae.. iethai arasangam seyal paduthalama.. ithai seyal padutha mudiuma? thank u sir.
ReplyDeleteநாகராஜன்:
ReplyDeleteஅந்த நாட்களில் வீடுகளில் வென்னீர் அண்டா உண்டு. அதன் அடிப்பகுதி கரி ஏறி அட்டைக் கரியாக இருக்கும். ஆனாலும் அதன் அடிப்புறத்தை தேய்த்து சுத்தப்படுத்த மாட்டாகள்.கரிய நிறம் வெப்பத்தை நன்கு ஈர்த்து விரைவில் வென்னீர் கிடைக்கச் செய்யும் என்பதே காரணம்.
நல்ல பதிவு ஐயா முடிந்தால் மின்னலிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் ஆய்வுகள்/முயற்சிகள் பற்றி ஒரு பதிவு எழுதுங்கள்
ReplyDeletesir nangal curent ellammal rompa siramapatukerom solor battrrv
ReplyDelete