நியாயமான சந்தேகம்தான். தமிழகத்தில் இந்த ஆண்டு குளிரானது வழக்கத்தை விட சற்று அதிகமாக உள்ளதாகவே தோன்றுகிறது. பாஸ்டன், லண்டன், மாஸ்கோ ஆகிய நகரங்களில் குளிரின் கடுமை பற்றிச் சொல்லவே வேண்டாம். நிலைமை இப்படி இருக்க சூரியனுக்கு அருகாமையில் இருக்கிறோம் என்று எப்படிச் சொல்ல முடியும்? இதை சற்று விளக்கியாக வேண்டும்.
ஜனவரி 5: பூமி சூரியனுக்கு அருகாமையில் உள்ளது. ஜுலை 5: பூமி சூரியனிலிருந்து மிகவும் அப்பால் உள்ளது. |
இந்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி சூரியன் அண்மை நிலையில் இருக்கும். அதாவது ஆண்டின் மற்ற நாட்களை விட அன்றைய தினம் தான் நாம் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கிறோம். அப்படியானால் ஜனவரி மாதம் தானே வெயில் கடுமையாக இருக்க வேண்டும்? அப்படி இல்லையே என்று கேட்கலாம்.
அப்படி இல்லாததற்கு முக்கிய காரணம் பூமியின் சாய்மானம். பூமியின் சாய்மானம் காரணமாகத் தான் பூமியில் கோடைக்காலம், மழைக்காலம், குளிர்காலம் போன்ற பருவங்கள் ஏற்படுகின்றன. பூமியின் நடுக் கோட்டுக்கு (Equator) வடக்கே உள்ள இடங்களில்-- வட கோளார்த்தம் -- இப்போது குளிர்காலம்.
பூமியானது தனது அச்சில் சுமார் 23.5 டிகிரி அளவுக்கு சாயந்தபடி உள்ளது. அவ்விதம் சாய்ந்த நிலையில் தான் அது சூரியனைச் சுற்றி வருகின்றது. ஜனவரி மாதத்தில் சூரியன் பூமிக்கு எதிர்ப்புறமாக சாயந்த நிலையில் உள்ளது.
நீங்கள் இரவில் விளக்குகளை அணைத்து விட்டு சுவர் அருகே நின்றபடி டார்ச் லைட்டை சுவர் மீது வெளிச்சம் விழும் படி ஆன் செய்யுங்கள்.வட்டமாக பிரகாசமான ஒளி விழும். பின்னர் டார்ச் லைட்டை தரையில் கிடத்தி ஆன் செய்யுங்கள்.
ஒளி இப்போது பரந்த பரப்பில் விழும். ஆனால் தரையில் விழும் ஒளி மங்கலாக இருக்கும். அதிகப் பரப்பில் விழுவதால் இப்படி ஏற்படுகிறது. குளிர் கால்த்தில் வட கோளார்த்ததில் இப்படியாகத் தான் வெயில் விழுகிறது.
கோடையில் ஒரு சதுர கிலோ மீட்டரில் விழுகின்ற அதே வெயில் குளிர் காலத்தில் பத்து சதுர கிலோ மீட்டரில் விழுவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். அப்போது நிச்சயம் வெயில் உறைக்காது. ஆகவே குளிர் தான் வீசும்.
ஆகவே கோடையா, குளிர் காலமா, வெயில் உறைக்குமா, குளிர் நடுக்குமா என்பது சூரியன் பூமிக்கு அருகில் உள்ளதா இல்லையா என்பதுடன் சம்பந்தப்பட்டது அல்ல.
இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். தமிழகம் மாதிரி பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே உள்ள பகுதிகளை விட 23 ஆம் டிகிரி வடக்கு அட்சரேகைக்கு வடக்கே உள்ள பகுதிகளில் -- வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவின் வட பகுதிகள் ஆகியவற்றில் சூரிய கிரணங்கள் மிகவும் சாய்வாக விழும். ஆகவே தான் குளிர் காலத்தில் அப்பகுதிகளில் குளிர் அதிகமாக உள்ளது.
இடது புறம்: ஜூலையில் சின்ன சூரியன். வலது புறம்: ஜனவரியில் பெரிய சூரியன். இது 2005 ஆம் ஆண்டில் அந்தந்த மாதங்களில் எடுக்கப்பட்டுப் பிறகு ஒன்று சேர்க்கப்பட்ட படம் |
thank you
ReplyDeleteReally really interesting.thanks
ReplyDeleteவணக்கம் ஐயா.
ReplyDeleteஒரு சிறிய ஐயம பூமி உருண்டையானது எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் உருண்டையாகத் தான் தெரியும் என்று நினைக்கிறேன் அப்படியிருக்க பூமி 23.5 டிகிரி சாய்வாக சுற்றுகிறது என்று எப்படி கணக்கிட முடிகிறது. இது சரியான கேள்வியா என்று தெரியவில்லை ஆனாலும் ஐயத்தை தீர்த்துக்கொள்ளலாம் என்று கேட்கிறேன் தவறிருந்தால் மன்னிக்கவும் ஐயா.
வெங்கடேஷ்
வெங்கடேஷ்
ReplyDeleteபூமி 23.5 டிகிரி சாய்வாக அமைந்திருக்கிறது என்ப்தை நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தபடி அளந்து உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். உங்கள் வீட்டில் கிழக்குப் பார்த்த ஜன்னல் இருக்கலாம்.அந்த ஜன்னல் வழியே சூரிய ஒளி ஏதோ ஓர் அறையின் சுவரில் விழுவதாக வைத்துக் கொள்வோம். வருகிற டிசம்பர் 21 ஆம் தேதி காலை 8 மணி வாக்கில் சூரிய ஒளி சுவரில் விழுகின்ற இடத்தைக் கோடிட்டுக் குறித்துக் கொளளவும். பிறகு மார்ச் 21 ஆம் தேதி இப்படி குறித்துக் கொள்ளவும். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட கோணத்தை கணக்கிட்டால் 23.5 டிகிரி வரும்.
வானில் சூரியன் ஒரே இடத்தில் தான் இருக்கிறது. பூமியின் சாய்மானம் காரணமாக வானில் சூரியன் இடம் மாறுவதாகத் தோன்றுகிறது. பூமி சாய்ந்தப்டி சுற்றுவதால்தான் சுவரில் விழும் ஒலி இடம் மாறித் தெரியும்
விளக்கத்திற்கு மிகவும் நன்றி ஐயா தாங்கள் கூறியதுபோல் செய்து பார்க்கிறேன்.
ReplyDeleteவெங்கடேஷ்.
thank for the information
ReplyDeletePlease clarify why December 21 & march 21 is taken as reference to measure the 23.5 degree??
ReplyDeleteRenganathan , Chennai.