சூரிய மண்டலத்தில் சூரியனை சுற்றும் கிரகங்களில் சனி முக்கியமான ஒன்றாகும். மொத்தமுள்ள எட்டு கிரகங்களில் வியாழன் தான் மிகப் பெரியது. சனி அதற்கு அடுத்த இடத்தை வகிக்கிறது.
சனி கிரகத்தை வானில் காண்பதற்கு டெலஸ்கோப் அல்லது பைனாகுலர்ஸ் தேவையில்லை. வெறும் கண்ணால் எளிதில் காணலாம். ஆனால் அது ஒளிப்புள்ளியாகத் தான் தெரியும். சனி கிரகத்தின் வளையங்க்ள் தெரியாது.
மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்து வானில் தெரிகின்ற கிரகங்களை ஆராயத் தொடங்கினான். வானில் ஓர் இடத்தில் தென்படுகின்ற ஒரு கிரகம் அதே இடத்துக்கு மறுபடி வந்து சேர எவ்வளவு ஆண்டுகள் ஆகின்றன என்பதைக் கணக்கிடலானான்.
இடது புறத்திலிருந்து மூன்றாவதாக உள்ளது சனி கிரகம். வலப் புறத்திலிருந்து மூன்றாவதாக நீல நிறத்தில் இருப்பது பூமி. |
சனி கிரகம் சூரியனை ஒரு தடவை சுற்றி முடிக்க 29.5 ஆண்டுகள் ஆகின்றன. இத்துடன் ஒப்பிட்டால் வியாழன் கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க 11.86 ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது. கெப்ளர் (Kepler) என்ற ஜெர்மன் வானவியல் நிபுணர் கண்டறிந்து கூறிய விதிகளின்படி ஒரு கிரகம் எந்த அளவுக்கு சூரியனிலிருந்து மிக அப்பால் உள்ளதோ அந்த அளவுக்கு அது தனது சுற்றுப் பாதையில் மெதுவாகச் செல்லும். சூரிய மண்டலத்தில் சனி கிரகம் வியாழனுக்கு அப்பால் ஆறாவது வட்டத்தில் அமைந்துள்ளது.
கொள்ளளவில் சனி கிரகம் பூமியை விட 700 மடங்கு பெரியது |
சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து திருவான்மியூருக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருக்கிற ஒருவர் திருவான்மியூரில் இருக்கிற தனது உறவினரிடம் செல் போனில் சில நிமிஷங்களுக்கு ஒரு முறை எல்.ஐ.சி யில் இருக்கிறேன், ராயப்பேட்டையில் இருக்கிறேன், மயிலாப்பூரில் இருக்கிறேன் என்று தாம் கடக்கும் இடங்களை வரிசையாகச் சொல்லிக் கொண்டே வருவதாக வைத்துக் கொள்வோம். கிரகங்களும் இவ்விதமாகத் தான் வானத்து ராசிகளைக் கடந்து செல்கின்றன.
சனி கிரகம் A என்ற இடத்திலிருந்து B என்ற இடத்துக்கு நகர்ந்துள்ளது - இதுவே சனிப் பெயர்ச்சியாகும். இப்படத்தில் 1. சூரியன். 2. பூமி. |
சனி கிரகத்தின் இன்னொரு தோற்றம் |
வியாழன், யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றுக்கும் வளையங்கள் உள்ளன என்றாலும் அவை மெல்லியவை. ஆகவே அவை எடுப்பாகத் தெரிவதில்லை. ஆனால் சனி கிரகத்தின் வளையங்கள் கண்ணைக் கவர்கின்றன.
சனி கிரகத்தின் வளையங்களில் ஒரு பகுதி |
படம்-1 ஹப்புள் எடுத்தது |
படம்-2 ஹப்புள் எடுத்தது |
1979 ஆம் ஆண்டில் தொடங்கி பயனீர்--1, வாயேஜர்-1, வாயேஜர்-2 ஆகிய ஆளில்லா விண்கலங்கள் சனி கிரகத்தை ஆராய்ந்தன. 1997 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்டு 2004 ஆம் ஆண்டில் சனி கிரகத்தை சென்றடைந்த காசினி-ஹைகன்ஸ் (Cassini-Huygens) விண்கலம் தொடர்ந்து சனி கிரகத்தை ஆராய்ந்து படங்களை அனுப்பி வருகிறது.
ரோமானிய புராணத்தில் சனி விவசாயத்தின் கடவுளாகக் கருதப்படுகிறார். இந்திய ஜோசிய முறையில் சனி கிரகம் பாபக் கிரகமாக, கெடுதல் செய்வதாகக் கருதப்படுகிறது.
ஜோசியத்தில் நம்பிக்கை வைப்பது அவரவர் விருப்பம். ஆனால் ஜோசியத்தில் நம்பிக்கை உள்ளவர்களும் சரி, நம்பிக்கை இல்லாதவர்களும் சரி, சனி கிரகத்தின் பெயரையே வசைச் சொல்லாக ஆக்கி விட்டனர். ‘சனியன் பிடித்த பஸ் தினமும் லேட்டா வருது’. ’சனியன் பிடித்த மழை எப்ப நிக்குமோ தெரியல?’. இப்படியாக எதற்கெடுத்தாலும் சனி கிரகத்தைத் திட்டித் தீர்ப்பது வேதனைக்குரியதாகும்.
சனி கிரகத்தை டிசம்பர் 22 ஆம் தேதி தென் கிழக்கு வானில் அதிகாலை 5 மணி வாக்கில் காணலாம் (கீழே வரைபடம் காண்க). அடிவானில் சந்திரன் பிறையாகத் தெரியும். அதற்கு மேலே பக்கம் பக்கமாக இரு ஒளிப் புள்ளிகள் தெரியும். இடது புறம் இருப்பது சனிக் கிரகம். வலது புறம் இருப்பது சித்திரை (Spica) நட்சத்திரமாகும்.
டிசம்பர் 22 காலை 5 மணி: தென் கிழக்கு அடிவானில் சந்திரன். பிறைக்கு மேலே இடது புறம் சனி, வலது புறம் சித்திரை (Spica) |
46 comments:
தெளிவான விளக்கம் சார். நன்றி
Every thing ok. What is the predictions for Simma Rasi during Saturn changes.
அருமை, நன்றிகள்
To Anonymous
எனக்கு ஜோசிய சமாச்சாரம் தெரியாது.
excellent article.
பல அரிய தகவல் தொகுப்பு தந்தமைக்கு நன்றி.வான சாஸ்திரத்தில் பழம் தமிழர்களின் பங்களிப்பு ஏதாவது உள்ளதா..?
சனிஸ்வர் என்ற சொல் சமஸ்க்ருத முலம் என்பதால்,எனக்கு இந்த சந்தேகம்.
நாகராசன்
பழங்கால சங்க இலக்கியங்க்ளில் ஆழ்ந்த புலவை கொண்டவர்களால் தான் அதற்குப் பதில் அளிக்க இயலும்.
Ur blog is so good! I like this blog very much.Keep posting like this....
Can u explain relativity with a series of posts?
My site:tipsfortechviewers.blogspot.com
GREETINGS FROM NORWAY..GREAT SERVICE..Thanks!
Really very good !
Very good explanation. Great Keep it up. we got so much of information from this blog. Keep on post...
nice info....please share some info on mars......
excellent article.
excellent article.
Excellent sir!!! I haven't known these much of things happening around us and your explanations are very simple and awesome!! Bravo!! Thanks!!
Hats off!!!
I never read such article.
Thanks for your useful info
Explained concepts scientifically well
waiting for more such articles
Thanks
மிக மிகஅருமை. சனி என்றதும், எனக்கு நிலா பற்றிய வெகுநாளைய சந்தேகம் ஞாபகம் வந்தது.
தயவுகூர்ந்து நிலவின் தேய்மானம் - வளர்ச்சி பற்றி தெளிவாக்குவீர்களா? (அம்மாவாசை முதல் பௌர்ணமி வரை)
I have seen the Saturn via telescope sir... What you have said is really true... By the way this is an excellent article. Many Thanks to you...
thank you very much for your extraordinary service for the world of science in vernacular language ! articles regarding universe and pictures are really great.
Interesting.Thank you very much .
its very very informative. Thank you sir. we expect more from you
Mohamed Mackie
nalla vilakkam
Hope no one will use Sani as a bad word from now, after reading your article.
Thanks for explaining the details very vividly.
ஓம்
சனியின் மற்றொரு பெயர் மந்தன்.அழகாகச் சொல்லியிருகிறீர்கள். நன்றியுடன்
வெ.சுபிரமணியன் ஓம்
V.Dotthathri
சனி கிரகத்துக்கு மந்தன் என்று ஒரு பெயர் உள்ளது என்பதை தாங்கள் கூறித்தான் எனக்குத் தெரியும்.மிகப் பொருத்தமான பெயர் தான்
Sir, Really it's an amazing article. Thank you. Please tell me whether there is any human in Cassini-Huygens which has been launched during 1997 and reached saturn during 2004(I admired by knowing about this). And how much time it takes to send the pictures or such data about saturn to earth ?
Kalai
பூமியிலிருந்து இதுவரை சந்திரன் ஒன்றுக்கு மட்டுமே மனிதன் சென்று வந்துள்ளான். ஒப்பு நோக்குகையில் சந்திரன் பூமியிலிருந்து சுமார் 4லட்சம் கிலோ மீட்டர் தொலவில் உள்ளது.சந்திரன் பூமியின் அவுட் ஹவுஸ் மாதிரி. மனிதன் இதுவரை எந்த கிரகத்துக்கும் சென்றது கிடையாது.காசினி விண்கலம் ஆளற்ற விண்கலம்.
சனி கிரக்த்திலிருந்து சிக்னல்கள் பூமிக்கு வந்து சேர ஒரு மணி 24 நிமிஷம் பிடிக்கும்.
Oh Superb...! Thank you sir...
மிகவும் அருமையான கட்டுரை சார். அருமையான தகவல்கள். நிறைய எழுதுங்கள்.தங்களைப் போன்றவர்கள் தான் நிறைய எழுத வேண்டும்.பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இதில் என்ன ஆச்சர்யம் என்றால் நம் முன்னோர்கள் இவை எல்லாம் எப்படி கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். சனி என்றாலே காரியங்கள் எல்லாம் மெதுவாகத் தான் நடக்கும். சனி ஜாதகத்தில் சில இடங்களில் இருந்தால்
திருமணம் தாமதமாக நடைபெறும்.குறிப்பாக சந்திரனுடன் இருக்கும் போது புனர்ப்பு என்பார்கள்.
குளிர்ச்சியான பொருட்களுக்கு சனியே காரகத்துவத்துவமாக இருக்கிறது.
நன்றி
இனியன் பாலாஜி
மிக அருமையான பதிவு. கற்பனையாக உருவாக்கப்பட்ட ராசி எல்லைகள் எவ்வாறு மனிதனின் அன்றாட வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதை எண்ணும்போது சிரிப்புத்தான் வருகிறது. இவ்வாறான பதிவுகளை நீங்கள் மேலும் தொடர வேண்டும்.
நன்றி.
அன்புடன்,
K..தணிகாசலம்
நல்ல தெளிவான விளக்கம் . நன்றி அய்யா
அன்புள்ள அய்யா,
சனி கிரகத்தைப் பற்றிய தங்களின் பார்வையும் அதற்க்கான விளக்கமும் மிகவும் அருமையாக உள்ளது
தொடரட்டும் உங்களின் நற்பணி
எங்களுக்காக தாங்கள் எண்ணிலடங்காது எழுதவேண்டும்
Dear sir i would like to buy your book விண்வெளி. But for nearly 6 months it has been out of stock in all book selling websites.Is there any way to get that book sir
சனி(யனைப்) பற்றிய உண்மைகள் சுவாரசியம்.
thelivaana seithi:::::::::::::::::::::::::::::MIKKA NANRI
great sir!
Thank U
ஷனீ (சரியாக ஷநீ) என்ற ஸம்ஸ்க்ருத சொல்லுக்கு “மெதுவாக” என்று பொருள். அதுவே அதன் காரணப்பெயர். ஷனைஷ்சரண (மெதுவாக செல்பவன்) எனப்தே ஷனீஷ்வரன் என்று மாறியதாக கூறுவோறும் உண்டு.
விளக்கம் அருமையாக இருந்தது நன்றி அய்யா.
sir,
venus (velli ),and uranus rotation direction is east -west.u wrote west -east.which one is correct?pls clarify my doubt.tis is for ur kind notice pls
kavi
தாங்கள் கூறுவது முற்றிலும் சரி. வெள்ளி கிரகம் தனது அச்சில் கிழக்கிலிருந்து மேற்காகச் சுழல்கிறது. கட்டுரையில் கைப்பிசகாக அதுவும் பிற நான்கு கிரகங்களுடன் சேர்க்கப்பட்டு விட்டது. யுரேனஸ் சமாச்சாரம் முற்றிலும் வேறானது. அது படுத்த நிலையில் தனது அச்சில் சுழல்கிறது.
kavi
மேலே கூறப்பட்ட விளக்கம் ஒரு கிரகம் தனது அச்சில் சுழல்வதைப் பற்றியதே. மற்றபடி பூமியின் சுழற்சி காரணமாக இவை கிழக்கே உதித்தாலும்12 ராசிகளும் மேற்கே இருந்து கிழக்காக அமைந்துள்ளதால் வானில் இவை மேற்கிலிருந்து கிழக்காகத்தான் நகருகின்றன.
மிக அருமை. பாராட்டுக்கள்!
சனி கோள்களின் கிரகம் என குறிப்பிட்டார்கள் இந்த சுமார் 140 கோடி கிலோ மீட்ட்ர் இப்படி எப்படி கணக்கில் எடுக்கப்பட்டது சனி கிரகத்துக்கு சமஸ்கிருதத்தில் சனைச்சரன் என்று குறிப்பிடப்பட்டது இந்த கிரகத்தின் தமிழ் பெயர் என்ன. சனிப்பெயர்ச்சி என்றால் சனி கிரகம் தன்னைத்தானே சுற்றி வரும் அளவா அல்லது சூரியன் சுற்றிவரும் அளவா.
Post a Comment