விமானத்தில் செல்லாமல் கடல் மார்க்கமாகப் பயணம மேற்கொண்டு வழி நெடுக பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை கடல் நீரின் உப்புத் தன்மை, கடல் நீரின் வெப்ப நிலை, வானிலை, கடல் நீரில் அடங்கிய ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை அளந்து செல்வதானால் பெரிய ஆராய்ச்சிக் கப்பல் தேவை. பல ஊழியர்கள் தேவை. இப்படியான பணிக்கு நிறைய செலவாகும்.
இடது புறம் இருப்பது ரோபாட் படகு படம் நன்றி: Liquid Robotics |
ஆளில்லாப் படகுகள் இவ்விதம் மிக நீண்ட தூரம் செல்வது இதுவே முதல் தடவையாகும். இவை ஜப்பானுக்குப் போய்ச் சேர 300 நாட்களாகும் என்று கருதப்படுகிறது.
ரோபாட் படகின் மேற்புறத் தோற்றம் படம் நன்றி: Liquid Robotics |
வழியறிந்து செல்வதற்காக ஜி.பி.எஸ். யூனிட்டும் (GPS) இப்படகில் இருக்கும். இக்கருவிகள் செயல்படுவதற்கான மின்சாரத்தை சூரிய ஒளி மின்பலகைகள் அளிக்கும். படகுகள் சேகரிக்கும் தகவலை உடனுக்குடன் செயற்கைகோள் மூலம் மையக் கேந்திரத்துக்கு அனுப்பி விட முடியும்.
சரி, எந்தவித எஞ்சினும் இல்லாமல் கடலில் எப்படித் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் என்ற கேள்வி எழுகிறது. இந்த ரோபாட் படகுக்கு அடியில் 23 அடி நீளத்துக்கு கேபிள் தொங்கும். அதன் நுனியில் ஆறு துடுப்புகள் உண்டு.
கடலில் இயல்பாக அலைகள் உருவாகும் - அதாவது, கடல் நீர் மட்டம் மேலே ஏறும், பிறகு கீழே இறங்கும். கேபிளின் நுனியில் தொங்கும் துடுப்புகள் கடலின் இந்த இயக்கதை ரோபாட் தொடந்து முன்னேறுவதற்கான இயக்கமாக மாற்றித் தருகின்றன. ஆகவே ரோபாட் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருக்கும். இதன் வேகம் மணிக்கு சுமார் நான்கு கிலோ மீட்டர்.
ரோபாட் படகுக்கு அடியில் துடுப்புகள் படம் நன்றி: Liquid Robotics |
லிக்விட் ரோபாடிக்ஸ் நிறுவனம் தனது ரோபாட் படகுகளை கடல் சார்ந்த பல துறையினருக்கும் விற்பதில் முனைப்பு காட்டி வருகிறது. ரோபாட் படகுகள் உருவாக்கப்பட்டு சில ஆண்டுகள் ஆகியுள்ளன என்ற போதிலும் பசிபிக் கடலைக் கடக்க இவை இப்போது தான் முதல் தடவையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நல்ல தகவல். நன்றி
ReplyDelete