ரஷியாவை செவ்வாய் ‘தோஷம்’ பிடித்துள்ளதோ என்று தோன்றுகிறது. நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு ரஷியா நவம்பர் 9 ஆம் தேதி செவ்வாயை நோக்கி ஒரு விண்லத்தைச் செலுத்தியது. அது விண்வெளி நிலையத்திலிருந்து வெற்றிகரமாக உயரே கிளம்பியது. அந்த விண்கலம் பூமியை ரவுண்டு அடித்து விட்டு செவ்வாயை நோக்கிச் சென்றிருக்க வேண்டும். ஆனால் அந்த விண்கலத்துடன் இணைந்த ராக்கெட் செயல்படாமல் போகவே அது தொட்ர்ந்து பூமியைச் சுற்றலாயிற்று.
அந்த ஆளில்லா விண்கலத்தில் ஏற்பட்டுள்ள கோளாறை சரி செய்ய இரண்டு வார அவகாசம் உள்ளது. அதற்குள்ளாக அதை சரி செய்து செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செல்லும்படி செய்து விடலாம் என்று ரஷிய நிபுணர்கள் நம்புகின்றனர்.
ரஷியா (அப்போதைய சோவியத் யூனியன்) முதல் தடவையாக 1962 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தை நோக்கி தனது விண்கலத்தை செலுத்த முயன்றது. அதில் வெற்றி கிட்டவில்லை.அப்போது தொடங்கி ரஷியா 16 தடவை செவ்வாய்க்கு விண்கலங்களை அனுப்பியது. அவற்றில் இரண்டு மட்டுமே முழு வெற்றி கண்டன. சில விண்கலங்கள் ஓரளவுக்கு வெற்றி என்று சொல்லலாம். மற்றவை தோல்வியைத் தழுவின.
செவ்வாய் கிரகத்தைச் சுற்றும் போபாஸ்(Phobos) எனப்படும் சந்திரனை நோக்கி ரஷியா 1988 ஆம் ஆண்டில் இரு விண்கலங்களை அனுப்பியது. இரண்டுமே தோல்வி கண்டன. செவ்வாய்க்கு அல்லது அக்கிரகத்தைச் சுற்றுகிற சந்திரனுக்கு விண்கலங்களை அனுப்ப ரஷியா மேற்கொண்ட முயற்சிகளில் பலவும் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ரஷியாவுக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் ராசி இல்லை என்பதாகப் பேச்சுகள் கிளம்பின. அதற்கு ஏற்ப இப்போது ரஷியா செலுத்தியுள்ள விண்கலத்துக்குப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
ரஷியா இப்போது செலுத்திய போபாஸ்-கிரண்ட் என்னும் விண்கலம் செவ்வாயைச் சுற்றுகிற மேற்கூறிய போபாஸ் என்னும் சந்திரனில் 2013 ஆம் ஆண்டில் போய் இறங்கி மண்ணையும் கல்லையும் சேகரித்து அங்கிருந்து கிளம்பி 2014 ஆம் ஆண்டு ஏபரலில் பூமிக்குத் திரும்ப வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ரஷிய விண்கலத்துடன் ஒரு சீன விண்கலமும் இணைக்கப்பட்டுள்ளது. செவ்வாயை அடைந்து அக்கிரகத்தைச் சுற்றுவது சீன விண்கலத்தின் நோக்கமாகும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்த காலத்தில் செவ்வாய்க்கு அமெரிக்கா அனுப்பிய விண்கலங்களில் அனேகமாக அனைத்தும் வெற்றி கண்டுள்ளன. ஆனால் வெள்ளி கிரகத்துக்கு அமெரிக்கா அனுப்பிய விண்கலங்கள் தோல்வி கண்டன. வெள்ளி கிரகத்துக்கு ரஷியா அனுப்பிய விண்கலங்கள் வெற்றி கண்டன.
அந்த ஆளில்லா விண்கலத்தில் ஏற்பட்டுள்ள கோளாறை சரி செய்ய இரண்டு வார அவகாசம் உள்ளது. அதற்குள்ளாக அதை சரி செய்து செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செல்லும்படி செய்து விடலாம் என்று ரஷிய நிபுணர்கள் நம்புகின்றனர்.
ரஷியா (அப்போதைய சோவியத் யூனியன்) முதல் தடவையாக 1962 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தை நோக்கி தனது விண்கலத்தை செலுத்த முயன்றது. அதில் வெற்றி கிட்டவில்லை.அப்போது தொடங்கி ரஷியா 16 தடவை செவ்வாய்க்கு விண்கலங்களை அனுப்பியது. அவற்றில் இரண்டு மட்டுமே முழு வெற்றி கண்டன. சில விண்கலங்கள் ஓரளவுக்கு வெற்றி என்று சொல்லலாம். மற்றவை தோல்வியைத் தழுவின.
ரஷியாவின் போபாஸ்-கிரண்ட் விண்கலம் |
ரஷியா இப்போது செலுத்திய போபாஸ்-கிரண்ட் என்னும் விண்கலம் செவ்வாயைச் சுற்றுகிற மேற்கூறிய போபாஸ் என்னும் சந்திரனில் 2013 ஆம் ஆண்டில் போய் இறங்கி மண்ணையும் கல்லையும் சேகரித்து அங்கிருந்து கிளம்பி 2014 ஆம் ஆண்டு ஏபரலில் பூமிக்குத் திரும்ப வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ரஷிய விண்கலத்துடன் ஒரு சீன விண்கலமும் இணைக்கப்பட்டுள்ளது. செவ்வாயை அடைந்து அக்கிரகத்தைச் சுற்றுவது சீன விண்கலத்தின் நோக்கமாகும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்த காலத்தில் செவ்வாய்க்கு அமெரிக்கா அனுப்பிய விண்கலங்களில் அனேகமாக அனைத்தும் வெற்றி கண்டுள்ளன. ஆனால் வெள்ளி கிரகத்துக்கு அமெரிக்கா அனுப்பிய விண்கலங்கள் தோல்வி கண்டன. வெள்ளி கிரகத்துக்கு ரஷியா அனுப்பிய விண்கலங்கள் வெற்றி கண்டன.
No comments:
Post a Comment