Nov 2, 2011

அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்?

Share Subscribe
‘வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுததத் தாழ்வு மண்டலம் காரண்மாக தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் பரவலாக மழை இருக்கலாம்‘ என்று டிவி அல்லது ரேடியோவில் வானிலை அறிவிப்பின் போது தெரிவிப்பார்கள்.மழை சீசனின் போது இவ்வித அறிவிப்பைக் கேட்கலாம்.

அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்?

தரையிலிருந்து தொடங்கி வானில் பல கிலோ மீட்டர் உயரம் வரை காற்று வியாபித்துள்ளது.காற்றுக்கு எடை உண்டு. ஆகவே மேலிருந்து கீழ் வரை உள்ள காற்று நம்மை அழுத்துகிறது. எந்த ஒருவரையும் காற்றானது கடல் மட்டத்தில சதுர செண்டி மீட்டருக்கு ஒரு கிலோ வீதம் அழுத்துகிறது. ஒரு புறத்திலிருந்து மட்டும் அழுத்தம் இருந்தால் நம்மால் உணர முடியும்.

 ஆனால் காற்று நம்மை எல்லாப் புறங்களிலிருந்தும் அழுத்துவதால் காற்று அழுத்துவதை நம்மால் உணர முடிவதில்லை.


ஓர் இடத்துக்கு மேலே இருக்கின்ற மொத்தக் காற்றின் அளவு இடத்துக்கு இடம் வித்தியாசப்படும். ஆகவே காற்றழுத்தமும் வித்தியாசப்படும். ஓரிடத்தில் காற்றழுத்தம் மிக் அதிகமாக இருக்கும்.வேறிடத்தில் குறைவாக இருக்கும்.இதற்கு சூரியனும் காரணம்.

 காற்றழுத்தம் அதிகமாக உள்ள இடத்திலிருந்து காற்றழுத்தம் குறைவாக உள்ள பகுதியை நோக்கி காற்று வீசும். காற்றுடன் மேகங்களும் நகரும். ஆகவே காற்றழுத்த நிலைமைகள் வானிலைத் துறையினருக்கு மிக் முக்கியம்.

வானிலைத் துறையினர் காற்றழுத்தத்தை அளக்க மேலே சொன்ன (சதுர செண்டிமீட்டருக்கு இவ்வளவு என்ற) கணக்கை பின்பற்றுவதில்லை.அவர்கள் கணக்குப்படி கடல் மட்டத்தில் சராசரி காற்றழுத்தம் 1013 மில்லி பார். காற்றழுத்தம் இடத்துக்கு இடம் மாறுபடுவதால் ஆங்காங்கு காற்றழுத்த அளவு மானி வைக்கப்படுகிறது.

காற்றழுத்தமானிகள் தெரிவிக்கின்ற எண்ணற்ற தகவலகளை வைத்து காற்றழுத்த நிலவரப் படம் தயாரிப்பார்கள். எந்தெந்த இடங்களில் ஒரே மாதிரி அழுத்தம் இருக்கிறதோ அந்த இடங்களை எல்லாம் சேர்த்து கோடு போடுவார்கள். இதற்கு Isobar  என்று பெயர்.அருகே உள்ள படத்தில் L என்ற எழுத்து Low  என்பதைக் குறிப்பதாகும்.H என்பது High  என்பதைக் குறிப்பதாகும்.படத்தில் 1008 என்று குறிப்பிடப்பட்ட கோட்டைக் கவனிக்கவும்.அக் கோடு அமைந்துள்ள இடங்கள் அனைத்திலும் காற்றழுத்தம் அந்த அளவில் இருக்கிறது என்று அர்த்தம்.

ஓரிடத்தில் காற்றழுத்தம் குறைவாக இருக்க, அதைச் சுற்றியுள்ள இடங்களில் எல்லாம் அதிகமாக இருக்க நேரிடலாம். நட்ட நடுவே காற்றழுத்தம் குறைவாக உள்ள இடத்தை Low என்று குறிப்பிடுவார்கள். நேர் மாறாக நட்ட நடுவே ஓரிடத்தில் அதிகமாக இருந்தால் அது High.

மேடாக இருக்கும் இடத்திலிருந்து தண்ணீர் பள்ளமாக இருக்கின்ற இடத்தை நோக்கிப் பாய்வது போலவே காற்றும் செயல்படுகிறது. வடகிழக்குப் பருவ மழைக் காலத்தின் போது காற்று வட கிழக்கிலிருந்து வீசுகிறது. கடல் மீதாக வருகின்ற மேகங்கள் ஆவி வடிவிலான நீரைத் தாங்கியவையாக வருகின்றன். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அந்த மேகங்களை ஈர்க்கும் போது மழை பொழிகிற்து.. ஆகவே கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தோன்றினால் மழை பெய்யும் வாய்ப்பு தோன்றுகிறது.

23 comments:

chinnapiyan said...

அருமை மிக அருமை.எல்லோரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது.நன்றி

Giri Ramasubramanian said...

மிகவும் தேவையான பதிவு.

காற்றழுத்தம் ஓரிடத்தில் குறைவாகவும், மற்ற இடங்களில் அதிகமாகவும், அல்லது வைஸி வெர்சா இருக்கக் காரணத்தை இன்னமும் விளக்கமாகக் கூற முடியுமா? ப்ளீஸ்?

Roaming Raman said...

பல ஆண்டுகளுக்கு முன் எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது: ஒரு மேப் பினை கையில் வைத்துக் கொண்டு சென்னைக்குத் தெற்கே தென் கிழக்கே இருநூறு -என்று சொல்லி இருந்தால் அவ்வாறே இமேஜின் செய்து கொண்டு, வானத்தைப் பார்த்தால்,அந்தத் திசையில் குறைந்த காற்றழுத்த மண்டலம் நோக்கி மேகங்கள் வேகமாகப் பயணிப்பதைக் காணலாம்... அவ்வாறே புயல் கரையைக் கடந்து விட்டதைக் கூட ஓரளவு யூகிக்க முடியும்.

Siraju said...

இதுவரை தெரியாமலேயே இருந்தோம். தெரிந்துகொண்டோம். நன்றி.

jill_online said...

தமிழில் அறிவியல் பதிவு!!!!!. வாழ்த்துகள்.

Unknown said...

ம்ம்ம் படிச்சுட்டேன்.

Radhakrishnan said...

அருமையான தகவல்கள்.

வவ்வால் said...

//காற்றழுத்தம் ஓரிடத்தில் குறைவாகவும், மற்ற இடங்களில் அதிகமாகவும், அல்லது வைஸி வெர்சா இருக்கக் காரணத்தை இன்னமும் விளக்கமாகக் கூற முடியுமா? ப்ளீஸ்?//

அதுக்கு "isotherm" னு ஆரம்பிப்பார் ராமதுரை, அதுக்கும் ஒரு விளக்கம் தேவைனு சொல்விங்க :-))

வெப்ப நிலை வேறுபாடு தான் காரணம், சூடான காற்று மேல் எழும்பும், அப்பொ தரைக்கு அருகில் வெற்றிடம் உருவாகும், அதை நோக்கி குளிர் காற்று வரும்னு எப்பவோ படிச்சேன்,அதுவும் இல்லாம வானத்தில காற்று ஓடைகள் இருக்கு. கொரியாலிஸ் எபஃக்ட்னு ஒன்னு இருக்கு,

-------------------------------------------------

ராம்துரை ,

உங்க மழைக்கான விளக்கம் சரியாப்படலை, அல்லது எனக்கு புரியலையா? நான் கொஞ்சம் வேற மாதிரி பார்த்த நினைவு. சைக்கிளோன்,ஆன்டி சைக்கிளோன் எல்லாம் எப்படி உருவாகிறது. எனக்கு அதுலவும் டவுட் எப்பவும் இருந்துக்கிடே இருக்கு.

என்.ராமதுரை / N.Ramadurai said...

தங்களது(வவ்வால்)சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள வருகிற இடுகைகளை வாசிக்கவும்.

Anonymous said...

minsaram evvaru uruvakiradu

Anonymous said...

ÁýÉ¢ì¸×õ. ¸¡üÈØð¾õ Ò¡¢ó¾¡Öõ, þýÛõ Å¢Ç츢 þÕì¸Ä¡§Á¡ ±ýÚ §¾¡ýÚ¸¢ÈÐ. ÁýÉ¢ì¸×õ.

Unknown said...

தமிழில் ஒரு விஷயத்தை புரிந்துகொண்டால் எப்போதும் மறப்பதில்லை, உங்களை போல் அனைவரும் தமிழில் எழுத ஆரம்பித்தால் இனியாவது தமிழ் வாழும்

Thiruvalluvarin gnanavettiyan said...

நன்றி

என்.ராமதுரை / N.Ramadurai said...

vel murugan
கட்டுரையை இன்னொரு முறை படிக்கவும்.காற்றுக்கு எடை உண்டு. அதனால் காற்றின் அழுத்தம் இடத்துக்குஇடம் மாறுபடுகிறது. காற்று அழுத்தம் குறைவாக உள்ள இடம் காற்றழுத்த தாழ்வு மண்டலம். இது தரையில் உள்ள மேடு பள்ளம் மாதிரி

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Shanaa said...

பயனுள்ள தகவல்கள் சிறு வயதில் பள்ளியில் படித்தது நன்றி

Unknown said...

Good Explanation. Thanks.Kalai.Srinu

Nanjil Siva said...

அருமையான தகவல்கள். நன்றி...

Unknown said...

Super...idhalaam therindhu kolla vendiya mukkiyamaana vishayam...

Unknown said...

சிறப்பான பதிவு நன்றி

Rajkumar Milton said...

அருமையான பதிவு நன்றி இன்னும் பல தகவல்கள் பதிவு செய்யவும் நன்றி

Unknown said...

காற்றழுத்த தாழ்வு மண்டலத்திற்கும் புயலுக்கும் என்ன வித்தியாசம், எது பாதிப்பை அதிகமாக உண்டு செய்யும்

Anonymous said...

THANK YOU VERY USEFUL MESSAGE

Post a Comment