ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் தளத்திலிருந்து வருகிற 12 ஆம் தேதி சுமார் 1000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் செலுத்தப்பட இருக்கிறது. இதன் பெயர் Megha-Tropiques.
Megha என்றால் மேகங்கள். Tropiques என்றால் பிரெஞ்சு மொழியில் வெப்ப மண்டலப் பகுதிகள் என்று பொருள். அதாவது உலகில் வெப்ப மண்டலப் பிராந்தியத்துக்கு மேலே இருக்கின்ற மேகக் கூட்டங்களை இச்செயற்கைக்கோள் ஆராய்ந்து தகவல் சேகரிக்கும்.
பூமியின் நடுக்கோட்டுக்கு (Equator) வடக்கே 22 டிகிரி வரை தெற்கே 22 டிகிரி வரை மட்டுமே இதன் பார்வை செல்லும். சூரியனிடமிருந்து பூமிக்கு இப்பிராந்தியத்தில் தான் அதிக வெப்பம் கிடைக்கிறது. இங்குதான் மேகங்களும் அதிகம்.
நடுக்கோட்டுக்கு மேலே மேகக் கூட்டம் |
செயற்கைக்கோளின் சுற்றுப்பாதை |
மேகக் கூட்டங்களின் நடமாட்டம் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். அந்த அளவில் தென் மேற்குப் பருவ மழை, வடகிழக்குப் பருவ மழை பற்றி நாம் மேலும் நன்கு தகவல் பெற முடியும்.
இந்தியாவின் மிக நம்பகமான PSLV ராக்கெட் மேகடிராபிக்ஸ் செயற்கைக்கோளைச் செலுத்தும். இது பொதுவில் ஒன்றரை டன் எடை சுமந்து செல்லக் கூடியது. மேகடிராபிக்ஸ் செயற்கைக்கோளின் எடை போக மேலும் சுமக்க முடியும் என்பதால் மூன்று சிறிய செயற்கைக்கோளையும் உடன் வைத்துச் செலுத்த இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment