ஆஸ்பத்திரியில் ஒரு நோயாளி பற்றிப் பேசுகையில் ரொம்ப ”க்ரிடிக்கல்” (Critical) என்று சொன்னால் நோயாளி உயிர் இழக்கும் அபாயம் இருக்கிறது என்று அர்த்தம். அணு உலை விஷய்த்தில் ”க்ரிடிக்கல்” என்றால் அணு உலைக்கு உயிர் வருகிறது என்று பொருள். அதாவது அணு உலையில் தொடர் அணுப் பிளவு தொடங்கி விட்டதைக் குறிக்கவே க்ரிடிக்கல் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். அந்த அளவில் ”க்ரிக்காலிடி” என்பது அணுசக்தித் துறையிலான கலைச் சொல்.
விசேஷ உலோகத்தால் ஆன குழாய்களுக்குள் சந்தன வில்லையின் அளவில் உள்ள யுரேனிய வில்லைகளைப் போட்டு நிரப்புவர். இந்த வில்லைகள் அடங்கிய குழாய்களைக் கட்டுகட்டாகச் சேர்த்து பக்கம் பக்கமாக வைத்தால் அதுவே அணு உலை.
யுரேனியம் என்பது கதிரியக்க உலோகம். இதற்குள்ளிருந்து ஓயாது நியூட்ரான்கள் வெளிப்படும். இந்த நியூட்ரான்கள் பிற யுரேனிய அணுக்களைத் தாக்கும். அப்போது யுரேனியத்தில் அடங்கிய யுரேனியம் - 235 எனப்படும் தனி வகை யுரேனிய அணுக்கள் பிளவு பட்டு அவை மேலும் நியூட்ரான்களை வெளிப்படுத்தும். அந்த நியூட்ரான்கள் மேலும் ஏராளமான யுரேனியம்-235 வகை அணுக்களைத் தாக்கிப் பிளவுறச் செய்யும். இதன் மூலம் ஆற்றல் வெளிப்பட்டு கடும் வெப்பம் தோன்றும். இந்த வெப்பம் யுரேனியத் தண்டுகளைச் சுற்றியுள்ள நீரை சூடேற்றும்.

இவ்விதமாகச் சூடேறும் நீரைத் தகுந்த ஏற்பாடு மூலம் நீராவியாக்கி அதனைக் கொண்டு ஜெனரேட்டர்கள் இயங்கும்படி செய்தால் மின்சாரம் உற்பத்தியாகும். அந்தந்த அணு உலைகளின் டிசைன்களைப் பொருத்து இதற்கான ஏற்பாடுகள் வேறுபடும். அணுப் பிளவு கைமீறிப் போகாமல் தடுப்பதற்கான ஏற்பாடுகளும் வித்தியாசப்படும்.
1 comment:
Happy to read these things in Tamil..The sad thing in TN is not much importance is given to understanding science with its essence..Hope your books get enough attention and spreads the essence of science.
Post a Comment