Pages

Oct 3, 2011

பூமியில் விழப் போகும் இன்னொரு செயற்கைக்கோள்

     அண்மையில் அமெரிக்க செயற்கைக்கோள் ஒன்று பூமியைப் பயமுறுத்தியது. இப்போது ஜெர்மன் செயறகைக்கோள் ஒன்று பூமியை நோக்கிப் பாய இருக்கிறது. ரோசட்டா என்று சுருக்கமாக குறிப்பிடப்படும் இந்த செயற்கைக்கோள் நவம்பர் மாதம் பூமியில் வந்து விழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பசிபிக் கடலில் வந்து விழுந்த அமெரிக்க செயற்கைக்கோளின் எடை 6 டன். ஜெர்மன் செயற்கைக்கோளின் எடை இரண்டரை டன் தான். இதன் எடை குறைவு என்பதால் பூமியில் வந்து விழுகின்ற துண்டுகள் சிறியதாகத் தான் இருக்கும் என்று ஆறுதல் கொள்ள முடியாது. ஏனெனில் ரோசட்டாவின் வெளிப்புறத்தில் வெப்பத்தை நன்கு தாங்கி நிற்கக்கூடிய கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.
 
      எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியின் காற்று மண்டலத்தில் நுழையும் போது மிகுந்த சூடேறி தீப்பற்றும். இதனால் செயற்கைக்கோளின் பெரும் பகுதி கருகி சாம்பலாகும். எஞ்சிய பகுதிகளே கீழே வந்து விழும்.ரோசட்டாவின் வெளிப்புறம் வெப்பத்தை நன்கு தாங்கி நிற்கும் என்பதால் எரிந்து போகாமல் மிஞ்சுகிற பெரிய துண்டுகள் நிறையவே இருக்கும்.

    ரோசட்டா 1990 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த செயறகைக்கோளில் அமைந்த காமிரா 1998 ஆம் ஆண்டில்  எதிர்பாராத விதமாக சூரியன் பக்கம் திரும்பிய போது சூரிய ஒளி காமிராவைப் பாதித்து செயற்கைக்கோளை செயலிழக்கச் செய்தது.

No comments:

Post a Comment